அத்தியாயம் 7

2.6K 190 20
                                    

ஆதித்யனாரும் வேலை முடித்து வீடு வந்து சேர்ந்தார்.மகனை காணவும்"என்ன தம்பி எப்போ வந்த?" என்றபடி வந்து டயனிங் அருகில் வந்தவரிடம் மனைவி சொம்பில் தண்ணீரை நீட்டினாள்.

"இப்போ தான்பா, ஒரு 2 மணி நேரம் இருக்கும்" என்றான் மகன் வழக்கமான மரியாதையுடன்.

"ம்.."என்றவர் தண்ணீரை குடித்துவிட்டு "அடுத்து கொஞ்ச நாள் வீட்டிலே இருப்பியா? வேற எதுவும் வேலை இருக்கா?" என்றார்.

"ம்..இருக்குப்பா, சாங் ஷூட் இருக்கு, ஹைதிராபாத் வரைக்கும் போகணும் ஒரு டூ வீக்ஸ் வேலை இருக்கு, அப்புறம் மறுபடியும் கொஞ்ச நாள் படம் ரிலீஸ் வரைக்கும் இங்க இருப்பேன்" என்றான் சாதரணமாக.

"ம்.." அருகில் இருந்த சோபாவில் உட்கார்ந்து கை கால்களை நன்கு நீட்டி மடக்கி ஒரு காலை மடித்து பாதி சம்மணம் இட்டு ஒரு காலை தொங்கவிட்டபடி அமர்ந்தார்.

"படம் எப்பிடி வந்திருக்கு நல்லா வந்திருக்கா?" என்றார் மகனை பார்த்து.

"ம்..நல்லா வந்திருக்குப்பா, ரஷ் பார்த்த வரையிலே நல்லா இருக்கு, சாங் சேர்த்தா கொஞ்சம் பெட்டரா இருக்கும்" என்றான் மகன் அப்பாவின் அருகில் வந்து அவரை போலவே உட்கார்ந்தபடி அருகில் கிடந்த குஷனை எடுத்து மடியில் வைத்து கொண்டான்.

"பழனி சாரை இப்போ தான் பார்த்தேன், ராகவ் உன்ன வைத்து படம் செய்யலாம்னு ஐடியாவில் இருக்காரு போல, உன்னை கூப்பிடுவாருனு நினைக்கிறேன், அவருக்குனா எதாவது கதை ரெடி பண்ணி வச்சிருக்கியா?" என்றார் அவர்.

"ஏற்கனவே கூப்பிட்டாருப்பா, ஒன் லைன் சொல்லிட்டேன்.பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாரு. இன்னிக்கு மீட் பண்ணலாம்னு சொல்லிருக்காரு,கூப்பிட்டா போகணும்" என்றான் மகன்.

"ஓ, பரவாயில்லையே ரொம்ப வேகமா தான் இருக்கீங்க, சரி தம்பி நீ போய் ரெஸ்ட் எடுத்துக்கோ கூப்பிட்டா போகணும் இல்ல"

சரிப்பா என்றவன் மாடியில் இருந்த தன் அறைக்கு சென்றான்.

அந்த வீட்டில் , அந்த ஹாலில் அவர்களது குடும்ப படம் அவன் காலேஜ் போகும் முன் , அவன் அக்காவின் திருமணத்திற்கு முன் எடுக்கப்பட்ட படம் ஒன்று அண்ணனுக்கு தம்பிக்கு மீசை எட்டி பார்த்த தருணம்.அவர்கள் குடும்பம் நிம்மதியாக இருந்த தருணத்தை நினைவு கூறும் ஒரு படம் , அப்புறம் அக்காவின் குடும்ப படம். அண்ணனுக்கு பெற்றோர் நடத்திய திருமணம் என்றாலும் அவன் மகன் படம் மட்டுமே அந்த வீட்டில் இருக்க அனுமதி பெற்று இருந்தது.

அன்புடை நெஞ்சம் கலந்தனவேDonde viven las historias. Descúbrelo ahora