அத்தியாயம் 34

3K 189 34
                                    

எல்லோரும் பேசியபடி மஹாவின் பெற்றோர் வந்து சேர்ந்தனர். ஏர்போர்ட்டிற்கு ட்ரைவர் போய் ஆடிகாரில் கூட்டி வந்தார். பூரணி பூரித்து போயிருந்தாள்.லிங்கம் நெகிழ்ந்து போயிருந்தார். பெரியவர்கள் இருவரையும் விக்ரமும் மஹாவும் வரவேற்றார்கள்.

வந்ததும் வராததுமாக பூரணி "மஹா, சாமி எல்லாம் எங்கே வச்சிருக்கே?" என்றாள்.

மஹா "மனசிலேம்மா" என்றாள் நெஞ்சில் கை வைத்தபடி குறும்பாக.

லிங்கம் பெரிதாக சிரித்தார்,விக்ரமும் தான். பூரணி மஹாவை முறைத்தாள்."கோசுக்காதே பூரணீ, வா நான் காட்டுகிறேன்" என்று சிரித்து கொண்டே சாமி இருந்த கப்போர்ட்டிற்கு அழைத்து போனாள் மகள். அங்கே சாமியை கும்பிட்டுவிட்டு குங்குமத்தை எடுத்து மகளுக்கு இட்டுவிட்டவள், கையில் கொண்டு வந்து மாப்பிள்ளைக்கும் வைத்து விட்டு "ரெண்டு பேரும் நல்லா இருக்கணும்."

"சரி எங்களுக்கு என்ன செஞ்சு வச்சிருக்கே?" என்றாள் மகளின் அருகில் உட்கார்ந்தபடி

"ம்..மாவு" என்றாள் மகள் நக்கலாக.

"என்ன மாவா, அய்யோ நீயா அரைச்சு எடுத்தே?" என்றாள் அன்னை பதட்டமாய்.

"ம்..இல்ல கிரைண்டர் தான் அரைத்தது" என்றாள் மகள் மறுபடியும் நக்கலாக.

"உனக்கு மட்டும் ஏன்டீ இப்பிடி ஒரு வாயி?அப்பா..உங்களுக்கு கோவில் தான் கட்டணும் மாப்ள" என்றாள் பூரணி.

"ம்..நானும் ஏற்கனவே சொல்லிட்டேனே, பொட்டி படுக்கையை கட்டி கொண்டு அவங்க அம்மாவீட்டுக்கு போக சொல்லீட்டேன்" என்றாள் மகள்.

"என்னது?" என திகைத்த பூரணியை பார்த்து மற்ற மூவரும் சிரித்தனர்.

லிங்கம் "இப்படி தான் மாப்ள, வீட்டில அம்மாவும் பொண்ணும் இப்பிடி பேசிகிட்டே இருப்பாங்க, நமக்கு தனியா டீவி பாட்டுன்னு எந்த எண்டர்டெயிண்மெண்டும் வேண்டாம்.ம்ச்.. மஹா இங்க வந்ததில் இருந்து இது தான் அந்த வீட்டில் இல்லாமே போயிருந்துச்சு.இப்ப தான் நல்லா இருக்கு." என்றார் சந்தோஷமாக.

அன்புடை நெஞ்சம் கலந்தனவேWhere stories live. Discover now