💙கரைகிறேன் உன்னால் அன்பே💙

194 4 0
                                    

கண்களில் கண்ணீர் நீருடன் பூங்காவில் அமர்ந்து இருந்தால் நித்திரவனி என்கிற நித்து.தன் தோழி தோளின் மேல் கை வைக்கவும் நினைவிற்கு வந்தாள்.

என்ன டி எவ்ளோ நாள்ல அவன நெனஞ்சுகிட்டு இருப்ப,தாமிரணி என்கிற தாமி.

பச் நா அவன மறக்கமுடியுமானு தெரியல டி,நித்து.

நா அப்போவே சொன்னன் நீ கேட்கல அவன் உன் பின்னாடி எப்டிலாம் சுத்திருப்பான் இப்போ என்ன பண்ண முடியும், தாமி.

இப்டி ரெண்டு பேரும் தங்களின் கல்லூரி நாட்களை எண்ணி கொண்டிருந்தனர்.

ஓய் ரெண்டு பேரும் வீட்டுக்கு போற ஐடியா இல்லையா என்ன என்று அங்கு வந்தான் சரவணன்.

இதோ கெளம்பிட்டோம் சரோ என்று கூறி விட்டு சென்றனர்.

நித்து வீட்டில் நுழைந்ததும் என்ன ரொம்ப டயர்டா இருக்க என்றார், லட்சுமி.

இல்ல மா வேல கொஞ்சம் அதிகம், நித்து.

சரி டி போய் ட்ரெஸ் மாத்து,லட்சுமி.

சரி மா என்று தனது அறைக்குள் நுழைந்து கொண்டால், நித்து.

நித்து வீட்டில் அப்பா ராகவேந்திரன் விவசாயி,அம்மா லட்சுமி,தம்பி ராஜேஷ் பி.காம் பைனல் இயர்.

தாமி வீட்டில் நுழையும் போதே

ஓ நெனப்பு நெஞ்சுக்குழி வர இருக்கு
ஏ உலகம் முழுசும் ஒன்ன சுத்தி சுத்தி கெடக்கு என்று பாடி கொண்டே வந்தால், தாமி.

கையில் கரண்டியுடன் இடுப்பில் கை வைத்து கொண்டு முறைத்து கொண்டிருந்தார்,சந்திரவனி.

அச்சச்சோ இன்னைக்கு நம்ம எதும் பண்ணலையே எதுக்கு சந்திரா நம்மள மொறைக்குது என்று மனதில் எண்ணி கொண்டிருந்தால் தாமி.

என்ன டி ஒனக்கு ரோட்டுல வரும் போதே பாட்டு வேண்டி கிடக்கு,சந்திரா.

ஓ அப்போ இதுக்கு தான் மொறைக்குதா என்று நினைத்து கொண்டு இருந்தால், தாமி.

என்ன டி கேட்க கேட்க பதிலே காணோம் ஏதோ சரியில்லையே ஒழுங்கா சொல்லு என்ன டி பண்ண, சந்திரா.

நினைவு வந்தவளாய் ஐயோ மா அப்டி லாம் இல்ல மா என்று சொல்லும்போதே இல்ல மா இவ ஏதோ பண்ணிருப்பா நல்ல கேளுங்க என்றவாறே வந்தால் மித்ரவனி என்கிற மித்து.

இல்ல மா இவ சொல்லுறத கேட்காத, தாமி.

இல்ல மா கண்டிப்பா பண்ணிருப்பா, மித்து.

இப்டி இருவரும் சண்டை போட்டு கொண்டு இருந்தனர்.

போதும் நிறுத்துங்க ரெண்டு பேரும், சந்திரா.

போடி பஸ்ட் ட்ரெஸ் மாத்து, சந்திரா.

சரி என்று தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள், தாமி.

தாமி வீட்டில் அப்பா சந்திரன் ஹோட்டல் வைத்து நடத்துகிறார்,அம்மா சந்திரவனி,அண்ணா ராகேஷ் எம்.பி.ஏ முடித்து விட்டு சென்னையில் ஒரு கம்பெனியில் மேனேஜராக இருக்கிறான், தங்கை மித்ரவனி ப்ளஸ் டூ படிக்கிறாள்.

அடுத்த நாள் அழகாக விட்டிந்தது.

தாமி முதலில் ஆஃபீஸ் வந்து விட்டதால் அனைவருடனும் அரட்டை அடித்து கொண்டிருந்தாள்.

என்ன டி காலை ஏ அரட்ட ஒனக்கு, நித்து.

இல்ல டி சும்மா தான், தாமி.

ஹாய் நித்து என்றவாரு அங்கு வந்தான், சரவணன்.

ஹாய் சரோ,நித்து.

வந்துட்டான் டா வந்துட்டான், தாமி.

என்ன அம்மி என்ன காலையே என்ன கலாய்க்குற,சரோ.

இன்னோரு தடவ என்ன அப்டி கூப்பிட கொன்றுவேன் டா ,தாமி.

அப்டி தான் கூப்பிடுவேன், சரோ.

போடா பக்கி, தாமி.

நீ போ அம்மி எரும,சரோ.

டீம் ஹெட் வந்ததும் அமைதியாக வேலையை தொடர்ந்தனர்.

மாலை ஆனதும் அனைவரும் வீட்டிற்கு கிளம்பும்போது நித்துவையும், தாமியையும் ஹெட் அழைப்பதாக கூறினார்.

இருவரும் உள்ளே நுழைந்ததும் நாளைக்கு ஒங்க ரெண்டு பேருக்கும் புது ப்ரொஜெக்ட் இருக்கு சோ நீங்கதான் அத பண்ணனும் என்றார் ஹெட்.

ஓகே சார், இருவரும்.

வெளியே வந்ததும்,

என்ன டி இப்டி சொல்லுறாரு எனக்கு தலையே சுத்துது, தாமி.

விடு டி பாத்துக்கலாம், நித்து.

சரி பை டி, தாமி.

நித்து, ம்ம் பை டி.

நித்து தனது அறையில் இருந்து பொருட்களை அடுக்கி வைத்து கொண்டு இருந்தாள்.ஒரு பொருள் கீழ் வில அதை எடுத்த நித்துவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

கரைகிறேன் உன்னால் அன்பேWhere stories live. Discover now