என் தேவதை 👩‍❤️‍👨 1

2.1K 25 10
                                    

என் தேவதை -1

அதிகாலையில் சூரிய ஒளி என் முகத்தில் அடித்து "டேய் தடியா மாங்கா மண்டையா என்னடா இன்னும் தூக்கம்... நானே எழுந்து கிளம்பி duty க்கு வந்துட்டேன்...நீ இன்னும் தூங்குற... எழும்பு டா..." என்று எழுப்ப..

கண்களை தேய்த்து கொண்டு மணியை பார்த்தேன்...

காலை 7 மணி....

"அய்யோ"என்று பதறி அடித்துக்கொண்டு எழுந்து bathroomகுள் நுழைந்தேன்...

20 mins ready ஆகி dining table லில் அமர்ந்தேன்... வழக்கம்போல் என் அம்மா பஜனையை ஆரம்பிச்சுட்டாங்க...

"ஏன்டா office க்கு போறவன் எவ்ளோ நேரம் டா தூங்குவ... collage போகும்போது தான் இப்படி இருந்தே னு பாத்தா...வேலைக்கு போகும்போது கூட இப்படியே இருக்கியே டா.. உனக்கேல்லாம் எப்போ தான் பொறுப்பு வருமோ.. உன் அண்ணா,தங்கை எல்லாம் எப்படி இருக்காங்க...நீ மட்டும் ஏன்டா வேலைக்கு போயும் இப்படி பொறுப்பே இல்லாம இருக்க...சரி ஒரு கல்யாணம் பண்ணா ஒழுங்கா இருப்ப னு நினைச்சு என் ஒன்றுவிட்ட அண்ணா பொண்ணு ஒருத்தி இருக்கா... கல்யாணம் பண்ணிக்கோ னு கேட்டா..பிடி கொடுத்தே பேசமாட்ற.. அந்த பொண்ணுக்கு என்னாடா குறை மகாலெட்சுமி மாதிரி அழகா இருக்கா.‌‌.அந்த பொண்ணு photo பாருடா வேணாம் னு சொல்ல மாட்ட... டேய் ராம் நீயாவது சொல்லேன்"...என்று எங்க அம்மா ஜானகி சொல்ல..

"யாரு டா அந்த ராம் னு பாக்குறீங்களா.. இதோ உட்காந்து திருதிருவென முழிச்சுகிட்டு இருக்காரே இவர் தான் என் கூட பொறந்த அண்ணன் சாய்ராம்...எனக்கு அவருக்கும் 10 வயசு வித்தியாசம்..என் அம்மா சொல்றத மறுபேச்சு பேசாம செய்வார்... நா என் அம்மா என்ன சொன்னாலும் காதுக்கே வாங்காம இருப்பே...இது வச்சே உன் கூட பொறந்தவன் தானே இவன் நா சொல்றத கேட்டு எப்படி இருக்கான்...நீ மட்டும் ஏன்டா இப்படி இருக்க னு கேட்பாங்க...இவர் silent ஹ இருந்தே எனக்கு திட்டு வாங்கி கொடுப்பார்...

அதோ அங்க ஒன்னு உட்காந்து சிரிக்கிறாளே அவ தான் என் தங்கச்சி ஹர்ஷிதா...என்னைய விட மூனு வயசு சின்னவ...போட்டு கொடுத்து என்னை நல்லா திட்டு வாங்க வைப்பா...அம்மா என்ன சொன்னாலும் சரி மா னு சொல்லிட்டு அப்புறம் அது பண்ண மாட்டா...கேட்டா sry மா படிச்சுட்டு இருந்தேன்...மறந்துட்டேன் னு சொல்லுவா...என் அம்மாவும் நம்ம பொண்ணு படிக்கறதுல எவ்ளோ ஆர்வமா இருக்கா னு சந்தோஷப்பட்டு எதுவும் சொல்லாம போயிருவாங்க...

என் தேவதை(முடிந்தது)Where stories live. Discover now