என் தேவதை 5👩‍❤️‍👨

760 15 16
                                    

என் தேவதை-5

"கிஷோர் எல்லாம் ready னு  check பண்ணியா டா மச்சான்..."

கிஷோர் : டேய் என்கிட்ட‌ நீ நல்லா வாங்க போற... உன்கிட்ட எத்தனை தடவ டா சொல்றது... வர வர உன்னோட அழிச்சாட்டியம் அதிகமாகிருச்சு..தாங்க முடியல...

"நா என்னடா பண்ணேன்..."

கிஷோர் : "கொன்றுவேன் டா படவா... இந்த விஷயத்துல நீ தலையிடாத‌னு சொன்னேனா இல்ல... எனக்கு தெரியும் இத எப்படி பண்ணனும் னு நீ பண்ற torture ல நா எல்லாத்தையும் மறந்துருவேன் போல...ஒழுங்கு மரியாதை யா அங்க போய் உட்காரு... இல்ல " என்று கிஷோர் திரும்பி பார்க்க...

அவன்‌ பார்த்த இடத்தில் என்ன இருக்கு னு பார்த்து "அய்யய்யோ  டேய் ஏன் டா மச்சான் நா நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலையா.. இப்ப எல்லாம் நானும் பார்த்துக்கிட்டு தான் இருக்கேன்... என்னை அடிக்கடி அங்க மாட்டி விட்றதே ஒரு பொழப்பா வச்சு இருக்க..இப்படியே பண்ணிட்டு இருந்தேனு வை அப்புறம் நா உன்னைய என் தங்கச்சி கிட்ட மாட்டி விட்டுருவேன்..
Be careful...

கிஷோர் : டேய் over ஹ பேசாம போய் கிளம்பு..time ஆச்சு பாரு... நீ தான் main ஹ ready ஆகி இருக்கனும்.. கிளம்பாம இங்க வந்து அது ready ஹ இது ready ஹ வந்து பேசிட்டு இருக்க..போடா முத கிளம்பு...

நா எதுவும் பேசாமல் சிரித்து கொண்டே என் room க்குள் வந்தேன்...

****************
"என்ன னு பார்க்கிறீர்களா... இன்னக்கி என் பொண்டாட்டிக்கு வளைக்காப்பு.. அதுக்கு தான் கிஷோர் என் தங்கச்சிக்கு நா தான் எல்லாத்தையும் ready பண்ணுவேன் ஒரே அடம்... அது தான் நீயே பண்ணி தொலை டா னு சொல்லிட்டேன்...நீங்க என்ன நினைக்கிறீங்க னு எனக்கு தெரியுது... என்ன டா நீ இப்ப தானே கல்யாணம் பண்ணாதா சொன்ன அதுக்குள்ள எப்படி டா னு பாக்குறீங்க தானே... அதிதிக்கும் எனக்கு கல்யாணம் ஆகி one and half year ஆச்சு.. இப்ப அதிதிக்கு ஒன்பதாவது மாசம்...

நா அதிதிக்கு கொஞ்ச பயப்படுவேன்...அது தான் இந்த கிஷோர் பய அதிதி ய காட்டி என்னை  blockmail பண்றான்..

என் தேவதை(முடிந்தது)Onde histórias criam vida. Descubra agora