என் தேவதை -4
இதோ விடிந்தால் எனக்கும் அந்த பொண்ணுக்கும் கல்யாணம்...
அனைவரும் நித்திரையில் ஆழ்ந்திருக்க... நா மட்டும் இங்கே மாடியில் என் காதல் நினைவுகள் அழித்து கொண்டு இருந்தேன்...
என் தோளை யாரோ தொட... திரும்பி பார்த்தேன்...
கிஷோர் தான்...
கிஷோர் : என்ன டா தூங்கலையா...
"இல்ல டா... ஆமா நீ தூங்கலையா... விடிஞ்சா கல்யாணம் டா...போ போய் தூங்கு..."
கிஷோர் என்னை முறைத்தான்...
"அவன் என்னைய முறைக்காம என்னங்க பண்ணுவான்... நா மட்டும் இப்ப புது மாப்பிள்ளை இல்ல இவனும் தான் புது மாப்பிள்ளை ரெண்டு பேருக்கும் ஒரே மேடையில கல்யாணம் இவனுக்கும் என் தங்கச்சி ஹர்ஷிதா வுக்கும் தான்... நா தூங்காம இவனை மட்டும் போய் தூங்கு னு சொன்னா கோபம் வருமா வராதா..."
"சரி சரி வா முறைக்காத..."
படியில் இறங்கும் போது கிஷோர் என்னை பாத்து ஒரு கேள்வி கேட்டான்...
கிஷோர் : டேய்... மச்சான் உனக்கு என் தங்கச்சியோட name என்ன னு தெரியுமா..?
"என்னது தங்கச்சியா யாரு டா உன் தங்கச்சி நீ வீட்டுக்கு ஒரு பையன் தானே..."
கிஷோர்: அட லூசு பையலே தங்கச்சி னு சொன்னது உன்னை கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு டா... உன் தங்கச்சி ய நா கல்யாணம் பண்ணா உன்னோட wife எனக்கு தங்கச்சி தானே டா....
"ஓ அப்படியா சரி சரி..."
கிஷோர்: என்ன சரி சரி...நா கேட்டதுக்கு பதில் சொல்லு...
"என்ன கேட்ட என்ன சொல்லனும்..."
கிஷோர் : கொய்யல என் தங்கச்சி name தெரியுமா னு கேட்டேன்...
"ஓ அதுவா...எனக்கு தெரியாது..."
கிஷோர்: என்ன தெரியாதா... அடப்பாவி பொண்ணு பேரு கூட உனக்கு தெரியாதா...
"ம்ஹ் பொண்ணையே தெரியாது..."
கிஷோர் : எனக்கும் தான் டா பொண்ணை தெரியாது... அத்தை பொண்ணோட photo வ காட்டுனாங்க.. நா தான் கல்யாணத்து அன்னக்கி ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு பாக்குறேன் னு சொன்னே... but name கேட்டேன்...
YOU ARE READING
என் தேவதை(முடிந்தது)
Romanceஇது என்னோட ரெண்டாவது கதை...நீ இன்னும் first கதையே முடிகல...அதுக்குள்ள இரண்டாவது கதையா னு பாக்கீறீங்களா...என்ன பண்றது..sudden ஹ இந்த கதை தோணுச்சு...அது தான் எழுதுறேன்.. இது short story தான்...படித்து பார்த்து சொல்லுங்க...