பாசத்துக்கு முன்னாடி தான் நான் பனி ஆனா ..... பகைக்கு முன்னாடி நான் புலி
என்று தன் அக்காவை பார்த்து சொல்லிக்கொண்டு இருந்தான் 20 வயது சிறுவன் (😝😝😝) மகேஷ் .
அவளும் சளைத்தவளல்ல என்று கூறி அவனோடு போட்டிக்கு சென்றால் அவனின் செல்ல இல்ல சண்டக்கோழி அக்கா அனாமிகா .நானும் பாக்குறேன் நீ பனியா இல்ல புலியானு (anami mind voice )
"அப்பா மகேஷ் என்னோடு கூந்தலை இழுக்குறான்பா " என்று நீலிக்கண்ணீர் விட அங்கு வந்த அவர்களின் தந்தை குமார் மகேஷுக்கு அறிவுரை கூற மகேஷோ
"இந்த அக்கா செம்மையா காலைலேய அப்பாகிட்ட மாட்டிட்டாலே . இருக்கு டி உனக்கு மவளே இவரு என்ன சொல்லப்போறாரு மகேஷ் காதுல பஞ்சை வெச்சிக்கோ"
என்று தனக்குள்ளே பேசிக்கொண்டான் மகேஷ் ."அப்பா உங்கள திட்றான்பா உங்க அட்வைச கேட்டா காதால ரெத்தம் வருமாம்பா " என்று ஓடிவிட்டாள் அனாமி .
"அடி படுபாவி இப்பிடி மாட்டிவிட்டிட்டியே ஒன்னல்லம் எதுக்கு தான் சைக்கோளாஜி படிக்க வெச்சாங்களோ தெரியல இப்போ என்ன பண்ண ஓடுடா மகேஷ் இல்ல நீ இன்னக்கி காலி " என்று நினைத்துவிட்டு நகரும்முன்னே குமார் மகேஷின் காதை திருகினார் ."ஐயோ அப்பா வலிக்குது அம்மா......" என்று இங்கு மகேஷ் கத்தும் போதே அனாமிகா "ஆ...ஆ....ஆ...ஆ...." என்று கத்திக்கொண்டே ஓடி வர இருவரின் பார்வையும் அங்கு திரும்ப குமார் மகேஷின் காதை விடுவிக்க அது தான் நல்ல சான்ஸ்னு அவனும் ஓட குமார் மகேஷை பிடிக்க ஓட இவர்களின் தாயும் குமாரின் மனைவியுமான மாலினி அனாமிகாவை பிடிக்க ஓடினார் .
கடைசியில் ஓரிடத்தில் வந்து மூச்சி வாங்க நின்றனர் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர் . அதன் பின்னர் வழமையான பேச்சுக்களோடு அவர்கள் இரவுணவு வேலை முடிய . அனைவரும் தூங்க செல்லும் போது தடுத்த அவ்வழைப்பை ஏற்றார் குமார் . என்ன சொல்லப்பட்டதோ
"கண்டிப்பா வரோம்"
என்று சந்தோசத்தில் கூறிவிட்டு அந்த அழைப்பை துண்டித்தவர் . அனைவரையும் பார்த்து ""நாளையிலிருந்து ஆறு மாசம் நாம சென்னைல இருக்க நம்ம பெரிய வீட்டுல இருக்கப்போறோம் நம்ம குடும்பத்தவங்க எல்லோரும் வாரங்களாம் நாளை காலையிலே கிளம்பனும் எல்லாரும் தயாராகுங்க"
என்று கூற மகேஷ் மற்றும் அனாமிகா ஹைபை போட்டுக்கொண்டு
"அப்போ பாட்டிகிட்ட கதை கேக்கலாம் தாத்தாவோட கிரிக்கெட் அடிக்கலாம் அத்தைகிட்ட சமையல் பழகலாம் நிதுகூட ஊரு சுத்தலாம் விக்னேஷ் கூட தொலைக்காட்சி பார்க்கலாம் எனக்கு அவன் கூடைப்பந்து போட கூட சொல்லித்தருவனே எஸ் எஸ் "
என்று கூறிக்கொண்டே போனவளை இடை நிறுத்திய மகேஷ்
"கீர்த்தி அக்கா அர்ஜுன் மாமா அந்த குண்டு பயங்களோட முடியுமா? நீ பாவாடை அணிவன்னு சொல்லியே சும்மா கலாய்ப்பாணுங்கலேக்கா "
என்று கூற இருவரின் முகமும் வாடியது .அவர்களின் முக வாட்டதை கண்ட பெற்றோர்
"அடிச்சா திருப்பி அடி ஆனா தவறு செஞ்சவங்களுக்கு மட்டும் . உன்ன என்ன சொன்னாலும் கணக்குல எடுக்காதிங்க ஏன்னா உங்க கிட்ட இருக்குற ஏதோ ஒன்னுனால தானே அவங்க அப்பிடி பேசுறாங்க என்பதை மனசுல வெச்சுக்கோங்க "
என்று சொல்லிய தம் பெற்றோரை பார்த்த இருவரும் "சரி " என தலை ஆட்டிவிட்டு சந்தோசமாக அவரவர்களின் அறையை நோக்கிச்சென்றனர் .