அடுத்த நாள் காலை அழகாக விடிந்தது. அவர்கள் பரபரப்பாக வீட்டை அழகுபடித்திக்கொண்டு இருந்தனர் . அங்கே வந்த ஒருவன்
"என்னத்துக்கு வீட்டை அலங்கரிக்கிறீங்க ? "
என்றதும் மற்றையவன்
"நம்ம கணேஷ் தாத்தா குடும்பம் வாரங்களாம் "என்றதும் மற்றையவன்
"திரும்ப சண்டை வந்து பிரியமா இருந்தா சரி "
என்றதும் மற்றையவனும் ஆமோதிப்பாய் தலை அசைத்து சொன்னான் .கொஞ்ச நேரத்தில் அனைத்து வேலைகளும் முடிந்து விட ஒவ்வொரு வாகனமாக வந்து நிற்க இறுதியில் ஒரு டாக்ஸி வந்து நின்றது . அனைவரின் பார்வையும் திரும்ப அதிலிருந்து இறங்கியது நம்ம நாயகி அனாமிகா மற்றும் அவளின் குடும்பமே அவர்களை பார்த்த கீர்த்தி அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தாள் .
பின்னர் அனைவரும் உள்ளே நுழைந்தனர் அனைவருக்கும் அறை எது என காட்டப்பட்டது அனாமிகாவிற்கு இரண்டாம் தளத்தில் ஓர் அறை வழங்கப்பட்டது . பாவம் கடவுள் விதி யாரிற்கு அவள் பயந்தாலோ அவன் இவளது அடுத்த அறையில் தங்கினான். அவன் வேறு யாருமல்ல நம்ம நாயகன் அர்ஜுன் .அனைவரையும் சீக்கிரமாக தயாராகி வர சொன்னார் அவர்களுன் பாட்டி மரகதம் . அவர் சொன்னது தான் அந்த வீட்டில் நீதி அவரின் பேச்சை யாரும் மீறியது கிடையாது ஒருவரை தவிர அது தான் நம்ம அனாமிகா .
மரகதம் மற்றும் கணேஷிற்கு பிறந்தவர்கள் தான் கிருஷ்ணா ,
முருகன், மாலினி , மைதிலி இது தான் இவங்க பிள்ளைங்கமாலினியை பத்தி சொல்லனும்னா அவங்க ரொம்ப நல்லவங்க ஆனா ரொம்ப ஸ்ட்ரிக்ட் அளவாக செலவு செய்வாங்க இவங்க கணவர் குமார் ஒரு மால் ஒன்று செஞ்சிட்டு போறாங்க இவங்க ரெண்டு பேருக்கும் பிறந்த செல்வங்கள் தான் அனாமிகா மற்றும் விஷ்வா. அனாமிகாவிற்கும் விஷ்வாவிற்கும் நான்கு வருடம் தான் வித்தியாசம் ஆனா இவங்கள மிஞ்சின அக்கா தம்பி யாருமே இல்ல .
மைதிலியை பத்தி சொல்லனும்னா நல்லவங்க தான் ஆனா திமிரு கூட இவர்களுக்கும் மூத்தவங்க மாலினி தான் கணவன் மகேஷ் ஒரு பிசினெஸ் மேன் இவர்களுக்கும் இரண்டு செல்வங்கள் மகள் கீர்த்தி மகன் வினோத் வித்யாவும் அனாமிகவும் ஒரே வயசு ஆனா ரெண்டு பேரும் இரு துருவங்கள் வினோத் விஷ்வாவை பார்க்க ஒரு வருடம் மூத்தவன் . இவங்க ரெண்டு பேரும் ஒன்னு சேந்துக்கிட்டு அனாமிய மற்றும் விஷ்வாவிற்கு பல கெடுதல் செய்வாங்க .