இரவின் இருளில்
இமை மூடினேன்....
இதயத்தில் இருந்து
கனவில் இறங்கினாள்....
இமை விரித்தேன்....
மதி தேடி
திரை திறந்தேன்....
அங்கே அவள்
மதியிலும் மிஞ்சி
என்னை மயக்கி நின்றாள்....
மயக்கம் கலைய
தலை கோதினேன்....
காற்றோடு கரைந்து
போனாள்....
அறிந்திந்து கொண்டேன்
இவை
அவளில் ஆயுள் கைதியாய்
அடையுண்ட அகத்தின்
அட்டகாசம் என்று....