இன்று எப்படியாவது தன் மனதை உரைத்தே ஆக வேண்டும் என உறுதி எடுத்து கொண்டாள்... 2 வருட பிரியம்.. அதை அவ்வபொழுது காட்டி இருந்தாலும்.. இன்று வரை வாய் விட்டு கூறவில்லை..
தனக்காக செய்த அத்தனை காரியத்தை நினைத்து பார்த்தவளுக்கு... கண்கள் குளமாக மாறியது.. எப்பேற்பட்ட அன்பு இது.. இது கிடைக்காமல் தானே ஒரு வருடமாக தான் நடை பிணமாக வாழ்ந்த நாட்கள் கண் முன் வந்தது..அதை எல்லாம் நினைத்து பார்த்து ஓய்ந்தவளுக்கு .. எப்படி நம் மனதை கூறுவது .. எதில் இருந்து ஆரம்பிப்பது என்ற குழப்பமே மேலே எழுந்தது..
தன்னை பற்றி ஒரு அளவிற்கு தெரிந்தாலும் முழுதாக இதுவறை கூறியது இல்லை.. நம் மனதில் இருப்பதை அப்படியே விட்டு விடலாமா ?? என்ற எண்ணம் எப்பொழுதும் போல் இன்றும் தோன்றியது..
இல்லை.. என்னவானாலும் இன்று கூறியே ஆக வேண்டும்.. இந்த நாளை இழந்தால் இனி சந்திப்போமா என்று கூட தெரியாது.. ஆகையால் கூறிவிடுவது என்ற முடிவுடன் அன்று பள்ளிக்கு சென்றால் ஆர்த்திகா....
12 ஆம் வகுப்பு படிக்கும் பெண் நம் ஆர்த்திகா.. இன்றே கடைசி நாள்.. பின்பு தேர்வுகள் ஆரம்பித்து விடும்.. இன்று அவள் பள்ளியில் பேர்வெல் டே.. இன்றே தன் மனதை கூறிவிட வேண்டும் என்ற வேகம் மட்டுமே அவளுள்...
விரைவாக கிளம்பி பள்ளிக்கு சென்றவள்.. அவள் பையை கிளாஸ் ரூமில் வைத்து விட்டு.. இன்னொரு பை அங்கே இருக்கிறதா ?? என்று தேட.. ஏமாற்றாமல் அங்கே அவள் தேடிய பை இருந்தது..
வேகமாக விளையாட்டு மைதானம் நோக்கி சென்றால்.. ஏனென்றால் அங்கு தான் இன்று ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று வர சொல்லி இருந்தாள்..
ஆகையால் அவள் விரைந்து சென்று அங்கே தேட. அங்கே அழகாக கன்னத்தில் குழி விழ சிரித்து கொண்டு இருந்தாள் அவள் தேடி வந்த அவள் தோழி புவனா...
அவளை கண்டவுடன்.. சந்தோஷம், பதட்டம், சிறு வெக்கம் என ஆர்த்திகாவின் முகம் கலவையான உணர்ச்சிகளை காட்ட.. அவள் அருகில் வந்தாள் புவி..