எனைத் தொடும் பனி 4
குன்னூரில் தேயிலை செடிகளின் வளர்ப்பும் அதன் இளம் இலைகளைப் பறித்து தயாரிக்கப்படும் தேயிலைத் தூள்கள் பிரசித்தமானவை. அவ்வாறான ஒரு பக்டிரியையே நம் நாயகனான அன்புவும் நடத்தி வருகின்றான். அங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலைத் தூள் பகற்றுகள் மூலம் அடைக்கப்பட்டு உள் நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்கப்படுகின்றன. இவனது தொழிற்சாலை பகற்றுகளில் அடைகப்படும்.
அதை வேறு ஒரு ஏற்றமதி செய்யும் கம்பனி வெளிநாட்டிற்கும், உள் நாட்டிலும் விற்பனை செய்யும். அக்கம்பனி அவனுடைய தாத்தாவின் கம்பனியே. அதை விற்று கிடைக்கும் இலாபத்தில் 50% இவனுக்கு வழங்கப்படும். இந்தியாவில் மிகப் பிரபலமான தேயிலைத் தூளை இவனது தொழிற்சாலையே உற்பத்தி செய்கின்றது. அதை சில வருடங்களாக நடத்தி இது வரையில் நல்ல இலாபத்தையும் பெற்று இருக்கின்றான்.
அத் தொழிற்சாலையிலேயே ஒரு புறத்தில் அவனுடைய அலுவலகம் இருக்கும். அதனால் அங்கே வருகைத் தந்த அன்பு தனது காரை நிறுத்தியவன் நேராக தனது அலுவலக அறைக்குள் நுழைந்தான். ரேகா, அன்பு வருகைத் தந்ததை உணர்ந்தவள் அவசரமாக அவனது அறைக்குள் அனுமதியோடு நுழைந்தாள்.
"என்ன ரேகா இன்னைக்கு லேட்டாக வருவேன்னு சொன்னிங்க? எப்போவும் போல வந்திருக்கிங்௧?"என்று பைலை படித்தவாறே கேட்டான்.
"சாமி கும்பிட்ட உடனே வந்துட்டேன் சேர். பேமிலி மெம்பர்ஸ் வெளியில் போகனும்னு சொன்னாங்க அதான்" என்றாள் பூரிப்புடன்.
இத்தனை நாட்களாக தான் வருகைத் தரும் நேரத்தையும், நேற்று அவள் கூறியதையும் தன் மேல் உள்ள காதலால் நினைவு வைத்திருக்கிறேனே என்று உள்ளுக்குள் சந்தோஷமடைந்தாள். ஒரு தொழிற்சாலையை வெற்றிகரமாஅ நடத்தி வருபவன் தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் கவனிப்பவனாக இருப்பான் என்பதை மறந்து போனாள்.

ESTÁS LEYENDO
எனைத் தொடும் பனி
Romanceஇந்தியன் ஆர்மி வலைவீசித் தேடித் திரியும் தீவிரவாதியின் மகளாக நாயகி அலீஷா. தன் தாய்நாடான இந்தியவிற்காக எதையும் செய்யத் துணியும் நாயகன் சிபியதீந்திரன். இருவரின் வாழ்க்கைப் பயணமே கதைக் கரு காதல் கலந்த அக்ஷன் கதை