தீபா தன் கைபேசியை எடுத்து தன் தோழி பிரியா எண்ணை அழைத்தாள்.
"பிரியா,இன்னிக்கு சாயங்காலம் 5 மணிக்கு மருத்துவமனை போகனும்.நியாபகம் இருக்கு இல்ல"
"இருக்கு டி.ஆனா நீ நல்ல யோசிச்சுட்டயா?"
"நல்லா யோசிச்சு எடுத்த முடிவு தான் இது"
"சரி.கனேஷ் கிட்ட சொலிவிட்டாயா?",என்றாள் பிரியா.
"ம்.சொல்லிவிட்டேன்.அவர் உன் இஷ்டம் என்று சொல்லிவிட்டார்.
"சரி.நான் அங்கு 4.30க்கு வந்து விடுவேன்.கிளம்பி இரு",என்று கூறி பிரியா தொடர்பை துண்டித்தாள்.
காலையில் இருந்து வேலை பார்த்ததால் தீபாவுக்கு அசதியாக இருந்தது.சற்று நேரம் உறங்கலாம் என்று தன் அறைக்கு சென்றாள்.
படுத்து கண்களை மூடினாள்.யாரோ அவள் கையை தொட்டது போல் இருந்தது.விழித்து பார்த்த போது அவள் ஒரு புல்வெளியில் படுத்து இருந்தாள்.சுற்றிலும் எதுவுமே இல்லை.தூரத்தில் ஒரு குழந்தை அழுது கொண்டு இருந்தது.அதன் அருகில் சென்றாள்.
அந்த குழந்தை தன் முதுகை காட்டிக் கொண்டு உக்கார்ந்து இருந்தது.தீபா அதன் தோளை தொட்டு"பாப்பா ஏன் அழுகிறாய் என்று கேட்டாள்".
அது சட்டென்று திரும்பியது.முகம் எல்லாம் இரத்த வெள்ளத்தில் இருந்தது.தீபா திடுகிட்டாள்.அங்கு இருந்து ஓட முயன்ற போது அது தன் இரத்தம் படிந்த கையோடு அவள் கையை பிடித்தது.தீபா அலறிக் கொண்டே எழுந்தாள்.முகம் பயத்தில் ஒலி இழந்து இருந்தது.ஒரு முறை சுற்றி பார்த்தாள்.அவள் தனது அறையில் தான் இருந்தாள்.
கடிகாரத்தை பார்த்தாள்.மணி 3.30 ஆகி விட்டது.சமையல் அறைக்கு சென்று காபி போட ஆரம்பித்தாள்.பாலை அடுப்பில் வைத்து விட்டு அது பொங்கும் நேரத்தில் தன் சிந்தனையை அலைய விட்டாள்.என்ன ஒரு கெட்ட கனவு .இதற்கு முன் இப்படி எதுவும் வந்தது இல்லையே.அவள் சிந்தனையை கலைப்பது போல் பின்னால் எதோ சத்தம் கேட்டு திரும்பினாள்.