2. என் காதல் சகியே!

2.1K 46 9
                                    

சிவா காவ்யாவின் வருகைக்காக ஒரு உணவகத்தில் காத்துக் கொண்டு இருந்தான்.அரை மணி நேரம் ஆகியும் அவள் அங்கு வரவில்லை.அவள் எண்ணை அழைத்தான்."எங்கே இருக்க"

"உன் பின்னாடி தான் டா இருக்கேன்",என்று கூறி சிரித்துக் கொண்டே அவன் முன் வந்து அமர்ந்தாள்.

"ஒரு அரை மணி நேரம் கூட எனக்காக உன்னால் பொறுமையாக காத்திருக்க முடியாதா", என்றாள்.

"உடனே பார்க்க வேண்டும் என்று சொன்னாய்.என்ன விசயம்",என்றான் அவசரமாக.

"நான் சந்தேக பட்டது சரியா போச்சு.அப்பா ஒரு வாரத்துக்கு முன் ஒரு குடும்பத்தை அறிமுகம் படுத்தினார் என்று சொன்னேன் அல்லவா.அவர்களின் பையனின் புகைப்படத்தை இன்று காட்டி பிடித்திருக்கிறதா என்று கேட்டார்."

"சரி அதை ஏன் என்னிடம் சொல்லுகிறாய்",என்றான் சிவா கடுப்பாக.

"உன்னிடம் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்லுவேன்"என்றாள்.

"அவன் என்ன செய்கிறான்",என்று கேட்டான் சிவா.

"அவன் சொந்தமாக ஒரு கம்பெனி வைத்து இருக்கிறான்"என்றாள் அமைதியாக.

"நல்ல பையன் கிடைக்கும் போது கல்யாணம் செய்வது தான் புத்திசாலிதனம்",என்றான் இயல்பாக.

"ஆமாம் அவனை கல்யாணம் பன்னிக் கொண்டு உன் பெயரை என் குழந்தைக்கு வைக்க போகிறேன் ",என்று கூறி சிரித்தாள்.

சிவா எதுவும் பேசவில்லை.

"என் அப்பா வீட்டில் இருக்கும் போது உனக்கு மெசேஜ் அனுப்புரேன்.நீ போன் பன்னி எங்க அப்பா கிட்ட பேசு.அப்பாவிடம் உனக்கு வேலை கிடைத்துவிட்டது.ஆர்டர்காக காத்துக் கொண்டு இருக்கிறேன்.ஒரு மாதத்தில் வேலையில் சேர்ந்து விடுவேன் என்று சொல்லு",என்றாள்.

"நான் எதுக்கு உன் அப்பாகிட்ட பேசனும்",என்றான்.

"போதும் டா விளையாடினது.அப்பா கிட்ட நல்ல படியா பேசி விடுவாய் அல்லவா",என்றாள் காவ்யா.

"இங்க பாரு காவ்யா.ஏதோ பேசினோம்.பழகினோம்.நல்லா சுற்றினோம்.இப்போ பிரிய வேண்டிய நாள் வந்து விட்டது.நீ உன் அப்பா சொல்லும் படி உன் வாழ்க்கையை அமைத்துக் கொள்.",என்றான்.

சிறுகதைகள்Donde viven las historias. Descúbrelo ahora