விஷ்வனாதன் தனது வீட்டில் தனது பிஏ வுடன் பேசிக் கொண்டு இருந்தார்.
"அந்த ராம் என்டெர்பிரைசிஸ் கு பத்து லட்சம் குடுக்கனும் சார்",என்றார் பி ஏ ரமேஷ்.
"சரி அதில் 5 லட்சம் வெள்ளையாகவும் பத்து லட்சம் கறுப்பாகவும் குடுத்துரு",என்றார்.
ஒரு பிச்சைகாரன் அவர் வீட்டின் வெளியில் வந்து நின்றான்.
"ஐயா அம்மா பிச்சை போடுங்க",என்றான்.
"சில்லறை இல்லை போ போ",என்றார் விஷ்வனாதன்.
"ஐயா சாப்பிட்டு இரண்டு நாள் ஆச்சு ஐயா ",என்றார் பிச்சைகாரர்.
"வீட்ல எதுவும் இல்லை போயிட்டு வா",என்றான் ரமேஷ்.
"வீட்டுல எதுவும் இல்லை ந என்கூட வாங்க நாலு வீட்டுல சாப்பாடு வாங்கி தறேன்.இவ்வளவு பெரிய வீட்டுல பட்டினியாவா இருக்கீங்க",என்று நக்கல் அடித்தான் பிச்சைகாரன்.
"டேய் உனக்கு ரொம்ப வாய் தான்.அதுதான் இன்னும் பிச்சைகாரனாவே இருக்க",என்று கூறி அவனை விரட்டி அடித்தார் விஸ்வனாதன்.இதே போல தினமும் நடந்தது.விஷ்வனாதன் பல கோடி ரூபாயோடு தினமும் புலங்கினாலும் பிச்சைகாரனுக்கு ஒரு பத்து ருபாய் கொடுக்க கூட மனசு வரவில்லை.எனினும் அந்த பிச்சைகாரன் தினமும் வருவதையும் நக்கலாக அவர்களை பார்த்து பதில் அளிப்பதையும் நிறுத்தவில்லை.
ஒரு நாள் மாலை விஷ்வனாதன் தொலைகாட்சி பார்த்துக் கொண்டு இருந்தார்.
"500,1000 ருபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவில் இருந்து செல்லாது",என்ற செய்தியை கேட்டு விஷ்வனாதன் அதிர்ச்சி அடைந்தார்.தன்னிடம் இருக்கும் கறுப்பு பணம் எல்லாம் வீணாகிவிட்டதே அதை எப்படி நல்ல பணமாக மாற்றுவது என்று தலையை பிய்த்துக் கொண்டார்.
மறுநாள் காலையில் தொலைகாட்சியில் செய்தி ஓடிக் கொண்டு இருந்தது.விஷ்நனாதன் தலையில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தார்.
அந்த பிச்சைகாரன் வழக்கம் போல வந்தான்.
இவரும் பழக்க தோஷத்தில் சில்லரை இல்லை போ போ என்றார்.
"உங்க கிட்ட சில்லரை இருக்காதுனு தெரியும் சார்.உங்களுக்கு சில்லரை எதாவது தேவைபடுமா நு கேட்டுட்டு போகலாம் நு வந்தேன்.500 ரூபாய் நோட்டு இருந்தா போடுங்க நான் போய் பேங்குல மாத்திகுறேன் ஆனா உங்களால அது முடியாதுல",என்று கூறி சிரித்தான்.
அவன் கூறியதில் இருந்த நிதர்சனமான உண்மை அவருக்கு அப்போது தான் புரிந்தது.
(முற்றும்)