4. ஓடி போலாமா!

961 36 6
                                    

காவ்யா கிஷோருக்காக‌ ஒரு பொது இட‌த்தில் காத்துக் கொண்டு இருந்தாள்.
கிஷோர் 15 நிமிட‌ங்க‌ள் க‌ழித்து வ‌ந்தான்.

காவ்யாவின் அருகில் அம‌ர்ந்தான்.
அவ‌ள் அமைதியாக‌ கையை பிசைந்து கொண்டு இருந்தாள். "என்ன‌ காவ்யா அவ‌ச‌ர‌மா வ‌ர‌ சொல்லீட்டு இப்ப‌டி பேசாம‌ இருக்க‌",என்றான் கிஷோர்.
"உன்கிட்ட‌ ஒரு விஷ‌ய‌ம் சொல்ல‌னும்",என்றாள் த‌ய‌க்க‌மாக‌.
"என்ன‌ சொல்லு",என்றான்.
"என் மாமாவுக்கு உட‌ம்பு ச‌ரி
இல்லை நு அப்பா அவ‌ரை பார்க்க‌ ஊருக்கு போனாரு",என்றாள்.
"ச‌ரி"என்றான் கிஷோர்.
"அவ‌ர் அப்பா கிட்ட‌ ஒரு ச‌த்திய‌ம் வாங்கி இருக்காரு",என்றாள்.
"என்ன‌ அது",என்றான்.
"அவ‌ர் பைய‌னுக்கு என்னை க‌ட்டிக் கொடுக்க‌னும் நு",என்றாள்.

அவ‌ன் அதிர்ந்து போனான்.
"ச‌த்திய‌ம் செஞ்சு கொடுத்துட்டாரா",என்றான் ப‌த‌ட்ட‌மாக‌.
"ஆமா டா",என்றாள் க‌ல‌க்க‌மாக‌.

"அவ‌னோடு ந‌ட‌க்க‌ இருக்கும் க‌ல்யாண‌த்துக்கு எந்த‌ ம‌ண்ட‌ப‌ம் பார்க்க‌லாம் நு கேட்க‌ என்னை வ‌ர‌ சொன்னியா",என்றான் க‌டுப்பாக‌.
  "என்ன‌ டா இப்ப‌டி பேசுர‌",என்றாள்.
"வேற‌ எப்ப‌டி பேச‌ சொல்லுர‌.உங்க‌ அப்பா கிட்ட‌ என்னை ப‌ற்றி சொன்னியா",என்றான்.
"இல்லை",என்றாள்.
"ஏன்.எப்போ சொல்லுவ‌",என்றான்.
அவ‌ள் அமைதியாக‌ இருந்தாள்.
"இப்ப‌டி அமைதியா இருந்தா என்ன‌ அர்த்த‌ம்.என்ன‌ க‌ழ‌ட்டி விட‌ போர‌ நு எடுத்துக்க‌லாமா",என்று க‌த்தினான்.
சில‌ர் இவ‌ர்க‌ளை பார்த்தார்க‌ள்.
காவ்யா அதிர்ச்சி அடைந்தாள்.
"ஏன் டா இப்ப‌டி க‌த்துர‌.மெதுவா பேசு",என்றாள்.
கிஷோர் த‌ன் த‌லையை ப‌த‌ட்ட‌மாக‌ கோதினான்.
"ச‌ரி உன் முடிவு என்ன‌",என்றான்.
"தெரிய‌லை",என்றாள்.
"அப்ப‌டினா என்ன‌ அர்த்த‌ம்",என்றான்.
"என‌க்கு என்ன‌ ப‌ன்ன‌ர‌துனு தெரிய‌லை",என்றாள்.
"ச‌ரி நான் கிள‌ம்ப‌றேன்.நீ அவ‌னையே க‌ல்யாண‌ம் ப‌ன்னிக்கோ",என்று கூறி எழுந்து சென்றான்.
"கிஷோர்",என்று அழைத்தாள் ஆனால் அவ‌ன் விடு விடு என்று சென்றான்.

என்ன‌ செய்வ‌து என்று அறியாது காவ்யா த‌னியாக‌ அம‌ர்ந்து கொண்டு இருந்தாள்.பெற்றோர் தான் த‌ன்னை புரிந்து கொள்ள‌வில்லை என்றாள் இவ‌னும் இப்ப‌டி செய்கிரானே என்று ம‌ன‌ம் வ‌ருந்தினாள்.க‌ண்ணில் நீர் க‌சிந்த‌து.
"ஓய்",என்னும் ச‌த்த‌ம் கேட்டு திரும்பினாள்.
கிஷோர் நின்று கொண்டு இருந்தான்.
"அழுக‌ரியா ப‌ர‌வ‌யில்லை பொக‌ட்டும் நு நினைக்காம‌ என்னை நின‌ச்சு அழுகுர‌.உன‌க்கும் என் மேல‌ ல‌வ் இருக்கு",என்றான்.
அவ‌ள் முறைத்தாள்.
அவ‌ள் அருகில் அம‌ர்ந்தான்.
"என்ன‌ செய்ய‌லாம் சொல்லு",என்றான்.
அவ‌ள் எதுவும் சொல்ல‌வில்லை.
"ஓடி போலாமா",என்றான்.
அவ‌ள் அதிர்ச்சியாய் அவ‌னை பார்த்தாள்.
"ஓடி போய் க‌ல்யாண‌ம் ப‌ன்னிக்க‌லாமா",என்றான்.
"என்ன‌ விளையாடுரியா",என்றாள் அல‌ட்சிய‌மாக‌.
"விளையாட‌லை காவ்யா.உண்மையா தான் சொல்லுறேன்.உன் அப்பா ப‌ண‌க்கார‌ர்.அவ‌ரை எதிர்த்து என்னால‌ போராட‌ முடியாது.இது சினிமா இல்லை.அதுக்காக‌ உன்னை விட‌வும் முடியாது.ஓடி போய் க‌ல்யாண‌ம் ப‌ன்னிகுலாம்",என்றான்.
"ஓடி போர‌தெல்லாம் என்னால‌ முடியாது.அப்ப‌டி ப‌ன்னினா இந்த‌ ச‌மூக‌ம் ந‌ம்ம‌லையும் ந‌ம்ம‌ குடும்ப‌த்தையும் கேவ‌ல‌மா தான் பார்க்கும்."என்றாள்.
"ச‌ரி வேண்டாம் ரெஜிஸ்ட‌ர் மேரேஜ் ப‌ன்னிக்கிலாம்",என்றான்.
அவ‌ள் யோசித்தாள்.
"ந‌ம‌க்கு அதுக்கு வ‌ய‌சு இருக்கா",என்றாள்.
"அத‌ல்லாம் நான் பாத்துகுறேன்",என்றான்.
அவ‌ள் குழ‌ம்பினாள்.
"க‌ல்யாண‌ம் ப‌ன்னிகிட்டா யாரும் ந‌ம்ம‌லை பிரிக்க‌ முடியாது.நீ உன் வேலையை தொட‌ர‌லாம்.நேர‌ம் வ‌ர‌ப்போ உன் அப்பா கிட்ட‌ சொல்லிக்க‌லாம்",என்றான்.
"என‌க்கு குழ‌ப்ப‌மா இருக்கு நான் யோசிக்க‌னும்",என்றாள்.
"யோசிக்க‌னுமா.அப்போ நான் உன‌க்கு வேண்டாமா.அப்போ ல‌வ் எல்லாம் சும்ம‌ வா",என்றான்
"ஏன் இப்ப‌டி பேசுர‌.நான் அப்ப‌டி சொன்னேனா",என்றாள்.
"அப்போ ஏன் த‌ய‌ங்குர‌.என் மேல‌ ந‌ம்பிக்கை இல்லையா",என்றான்.
"அப்ப‌டி இல்லை அவ‌ச‌ர‌த்தில் எடுக்கும் முடிவு த‌ப்பா தான் இருக்கும்",என்றாள்.
"இப்போ என்ன‌ சொல்ல‌ வ‌ர‌",என்று ப‌ல்லை க‌டித்தான்.
அவ‌ள் அவ‌ன் கையை தொட்டாள்.
"நான் உன்னை ல‌வ் ப‌ன்ன‌ர‌து நிஜ‌ம்",என்றாள்.
"அப்புற‌ம் என்ன‌ நான் ஏற்பாடு எல்லாம் ப‌ன்னுரேன்.நீ வ‌ந்து நின்னா ம‌ட்டும் போதும்",என்றான்.
"பேசீட்டே இருந்தா நீ ச‌ரிப‌ட்டு வ‌ர‌ மாட்ட‌.போ நான் எல்லாத்டையும் பாத்துகுறேன்.ல‌வ் யு பாய்",என்று கூறி அவ‌ன் எழுந்து கொண்டான்.
"டேய் நில்லு டா",என்றாள் ஆனால் அவ‌ன் சென்று விட்டான்.

சிறுகதைகள்Donde viven las historias. Descúbrelo ahora