6. என் உயிர் ம‌க‌னே!

519 22 1
                                    


ஒரு பிசியான‌ காலை நேர‌ம்.அனைவ‌ரும் இந்த‌ வேக‌மான‌ உல‌க‌த்தில் தாக்கு பிடிக்க‌ காலில் ச‌க்க‌ர‌த்தை க‌ட்டிக் கொண்டு ப‌ற‌ந்த‌ன‌ர்.அப்ப‌டி பிசியாக‌ இய‌ங்கிக் கொண்டு இருந்த‌து ஒரு த‌னியார் ம‌ருத்துவ்ம‌னை.ப‌ல‌ர் த‌ன‌து உற‌வின‌ருக்கு பில் க‌ட்டுவ‌த‌ற்கு வ‌ரிசையில் நின்று கொண்டு இருந்த‌ன‌ர.ம‌ருத்துவ‌ம‌னையின் ம‌ருந்து க‌டையிலும் ஒரு கூட்ட‌ம் நின்று கொண்டு இருந்த‌து.ம‌ருத்துவ‌ம‌னையின் வ‌ர‌வேற்ப‌றையில் நிறைய‌ நாற்காலிக‌ள் போட‌ப்ப‌ட்டு இருந்த‌து.அதில் ப‌ல‌ வித‌ பிர‌ச்ச‌னைக‌லுக்காக‌ டாக்ட‌ரை பார்க்க‌ வ‌ந்த‌வ‌ர்க‌ள் அம‌ர்ந்து இருந்தார்க‌ள்.ந‌ர்சுக‌ள் அங்க‌ங்கே ந‌ட‌ந்து கொண்டு வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்க‌ள்.அப்போது திடீர் என்று ஆம்புல‌ன்ஸ் ச‌த்த‌ம் கேட்ட‌து.ம‌ருத்துவ‌ம‌னையில் இருந்த‌ அனைவ‌ரும் ச‌த்த‌ம் வ‌ரும் திசையை நோக்கி திரும்பி பார்த்தார்க‌ள்.ந‌ர்சுக‌ள் நால்வ‌ர் ஆம்புலென்சை நோக்கி ஓடினார்க‌ள்.யாருக்கு என்ன‌ ஆன‌தோ என்று எண்ணி அனைவ‌ரின் ம‌ன‌தும் ப‌தை ப‌தைத்த‌து.

ஒரு இள‌ம் வ‌ய‌து பைய‌னை ஸ்டிரெச்ச‌ரின் த‌ள்ளிக் கொண்டு வ‌ந்தார்க‌ள் ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌ணிபுரியும் இருவ‌ர்.ந‌ர்சுக‌ளில் இருவ‌ர் அந்த‌ பைய‌னோடு ஓடினார்க‌ள்.இன்னொருவ‌ர் டாக்ட‌ரை அழைக்க‌ ஓடினார்.இன்னுரு ந‌ர்ஸ் என்ன‌ ஆன‌து என்று அந்த‌ பைய‌னின் உற‌வின‌ரிட‌ம் விசாரித்துக் கொண்டு இருந்த‌ன‌ர்.
"சார் பைய‌ன‌ ப‌த்தின‌ விவ‌ர‌ம் எல்லாம் reception ல‌ சொல்லி அட்மிச‌ன் போடுங்க‌ சார்",என்றாள் ஒரு ந‌ர்ஸ்.
"நாங்க‌ ப‌க்க‌த்து வீட்டு கார‌ங்க‌ மா.அவ‌ன் அம்மா அங்கே இருக்காங்க‌",என்றார் அவ‌ர்.
"அப்போ அவ‌ங்க‌ள‌ போட‌ சொல்லுங்க‌ சார்.அட்மிச‌ன் போட்டா தான் treatment ஆர‌ம்பிக்க‌ முடியும்",என்றாள் அவ‌ள்.
அந்த‌ பெரிய‌வ‌ர் அவ‌ன் தாயை அழைத்தார்.
ஒரு 50 வ‌ய‌துள்ள‌ அம்மா புட‌வையில் த‌ன் க‌ண்ணீரை துடைத்துக் கொண்டே எழுந்து வ‌ந்தார்.
"அம்மா பைய‌ன் பேரு என்ன‌ மா",என்றார் ந‌ர்ச்.
"தீப‌க்"
"என்ன‌ வ‌ய‌சு ஆகுது"
"24"
"என்ன‌ பிர‌ச்ச‌ணை"
"விஷ‌ம் குடிசுட்டான்"
ச‌ரி இதுல‌ உங்க‌ வீட்டு முக‌வ‌ரி பேரு எல்லாம் எழுதி ஒரு கைஎழுத்து போட்டு சீக்கிர‌ம் குடுங்க‌",என்றார் ந‌ர்ஸ்.
அவ‌ர் எழுத‌ துவ‌ங்கினார்.
கூட்ட‌த்தில் ஒரு ச‌ல‌ ச‌ல‌ப்பு ஏற்ப‌ட்ட‌து.
"அந்த‌ பைய‌ன் விஷ‌ம் குடிச்சிருச்சாம்",என்றார் ஒருவ‌ர்.
"ல‌வ் ஃபெய்லிய‌ர் போல‌ருக்கு",என்றார் இன்னொருவ‌ர்.
"சின்ன‌ வ‌ய‌சு பைய‌ன்.அவ‌ன் அம்மாவ‌ பார்த்தா பாவ‌மா இருக்கு",என்றார் இன்னொருவ‌ர்.சிறிது நேர‌த்தில் ச‌ல‌ ச‌ல‌ப்பு குறைந்து இய‌ல்பு நிலை திரும்பிய‌து ம‌ருத்துவ‌ம‌னையில்.
தீப‌க் ICU விற்கு அழைத்து செல்ல‌ப்ப‌ட்டான்.அவ‌ன் அம்மா வெளியில் போட‌ப் ப‌ட்டு இருந்த‌ நாற்காலியில் அமைதியாக‌ காத்துக் கொண்டு இருந்தாள்.

சிறுகதைகள்Tahanan ng mga kuwento. Tumuklas ngayon