8. பிரிவு

467 15 4
                                    

The Break up story-part 1

வெற்றி த‌ன‌து வீட்டின் மொட்டை மாடியில் நின்று கொண்டு எதை ப‌ற்றியோ தீவிர‌மாக‌ யோசித்துக் கொண்டு இருந்தான்.அவ‌ன் கைபேசி ஒலித்த‌து.
யார் என்று பார்த்துவிட்டு க‌ட் செய்தான்.சிறிது நேர‌ம் க‌ழித்து மீண்டும் ஒலித்த‌து.
"ச்சே இவ‌ விட‌ மாட்டா போல‌ இருக்கே"என்று சலித்துக் கொண்டு போனை க‌ட் செய்தான்.

வெற்றி பொறியிய‌ல் ப‌டிப்பை முடித்துவிட்டு ஒரு IT க‌ம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தான்.அவ‌ன் சுவேதா என்ற‌ பெண்ணை காத‌லித்துக் கொண்டு இருந்தான்.சுவேதா ஒரு க‌ல்லூரியில் B.Sc இறுதி ஆண்டு ப‌டித்துக் கொண்டு இருந்தாள்.

"என்ன‌ சுவேதா எப்போ கேப் கிட‌ச்சாலும் போனும் கையுமா இருக்க‌ என்ன‌ ஆச்சு"என்றாள் அவ‌ள் தோழி மித்ரா.

"வெற்றி ஒரு வார‌மா போன் ப‌ண்ணா எடுக்க‌ மாட்டேங்குரான்.அவ‌னுக்கு என்ன‌ ஆச்சுன்னு ம‌ன‌சு ப‌த‌றுது"என்றாள் சுவேதா.

"ஏய் லூசு அவ‌ன் வீடு தான் உன‌க்கு தெரியுமே நேரா போய் பார்க்க‌ வேண்டிய‌து தான‌"என்றாள் மித்ரா.

"அவ‌ன் கூட‌ இன்னும் இர‌ண்டு மூணு பேர் த‌ங்கி இருக்காங்க‌ டி.போக‌ ச‌ங்க‌ட‌மா இருக்கு"என்றாள் சுவேதா.

"அதை எல்லாம் பார்த்தா முடியுமா.இங்க‌ உட்கார்ந்து புல‌ம்புர‌துக்கு போய் பாத்த‌ர‌லாம் "என்றாள் மித்ரா.

"ச‌ரி டி காலேஜ் முடிஞ்ச‌தும் போய் பார்க்குறேன்.இன்னிக்கு அவ‌னுக்கு ஆபீஸ் லீவ் தான்"என்றாள் சுவேதா.

"டேய் ம‌ச்சான் என்ன‌ டா மொட்டை மாடீல‌ இந்த‌ மொட்ட‌ வெயிளுல‌ நின்னுக்கிட்டு இருக்க‌"என்றான் அவ‌ன் ந‌ண்ப‌ன் சுதிர்.

"சும்மா தான் டா"என்றான் வெற்றி.
அவ‌ன் போன் மீண்டும் ஒலித்த‌து.
சுவேதா என்ற‌ பெய‌ரை பார்த்துவிட்டு க‌ட் செய்தான்.
"யாரு டா"என்றான் சுதிர்.
"சுவேதா"என்றான்.
"ஏன் டா க‌ட் ப‌ன்னுர‌"என்றான் சுதிர்.

மீண்டும் போன் ஒலித்த‌து.மீண்டும் க‌ட் செய்தான்.
"எதுக்கு டா பேசாம‌ க‌ட் ப‌ன்னிகிட்டே இருக்க‌"என்றான் சுதிர்.

சிறுகதைகள்Tahanan ng mga kuwento. Tumuklas ngayon