27

414 51 58
                                    

காலையில்,

"அம்மா நான் பிருந்தாவை கூட்டிட்டு ஊர சுத்திக்காட்டிட்டு வரேன்" என்று கூற அவனின் தாயும் அதற்கு சம்மதித்தார்.

"அண்ணா நானும் வரேன்" என்று கவி கேட்க விக்ரம் "இல்லை நீ அம்மா கூட வீட்ல இரு" என்று கூறியவன் பிருந்தாவை நோக்கி "டிறஸ் மாத்திட்டு வாங்க நம்ம போயிட்டு வரலாம்" என்றான்.

பிருந்தாவுக்கு அவன் ஏன் தன்னை மட்டும் அழைத்து செல்ல முயலுகின்றான் என்பது ஓரளவுக்கு புரிந்தாலும் இன்று விக்ரமிடம் இது பற்றி பேசி ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டும் என்ற நினைப்பில் இருந்தாள்.

வான் நீல நிற பாவாடை சட்டை அணிந்து வந்தவளை விக்ரம் முன் போல் ஜொல்லு வடிக்காமல் சாதாரணமாக பார்க்க கவிக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. எங்கு தன் அண்ணனின்  பார்வையை வைத்து அவனை பிருந்தா தவறாக எண்ணி விடுவாரோ என்ற பயம் அவளுக்கு. அதுவும் இருவரும் தனியாக வெளியில் போகின்றார்கள் என்றதுமே அவளுக்கு நெஞ்சு பட பட வென அடித்துக்கொண்டது. கவிந்தி முன்பெல்லாம் பிருந்தா போல ஒரு பெண் தனக்கு அண்ணியாக வர வேண்டும் என நினைத்தவள் இப்போது பிருந்தாதான் தனக்கு அண்ணி என்று முடிவே செய்திருந்தால்.

பச்சை பசுமையாக இருந்த அந்த ஊரின் அழகை தன் கண்களால் அளவலாவிக்கொண்டு வந்தவள் "விக்ரம் உங்க ஊருல ஏரிலாம் இருக்கா? எனக்கு ஏரில குளிக்கனும்னு ரொம்ப ஆசை" என்றவளை பார்த்து புன்னகைத்தான்.

"ஏரிக்கு இன்னொரு நாள் போகலாம்.இன்னைக்கு உங்கள வேறொரு இடத்துக்கு கூட்டு போறேன்" என்று அவளை அழைத்து சென்று நிறுத்திய இடம் ஒரு மாந்தோப்பு.

கண்ணுக்கெட்டும் தூரம் வரையும் மா மரமும், பலா மரமும் தென்பட பிருந்தாவின் கண்களை அவளால் நம்பமுடியவில்லை. நாம் இரவு பேசியதை ஒருவேலை இவன் கேட்டிருப்பானோ என்ற எண்ணத்தில் அவனை பார்த்தாள்.

"நீங்க நினைக்கிறது  நூறு விகிதம் சரி. நைட்டு நீங்களும் கவியும் பேசிக்கிட்டு இருந்தது என் காதுல கேட்டிச்சி. அதான் உங்களோட சின்ன சின்ன ஆசைகள்ள ஒன்றான மாங்காய் பறிக்க வேண்டும் என்பதை நிறைவேற்ற அடியேன் உங்களை கூட்டி வந்துள்ளேன் மகாராணியாரே" என்று கூற அவளின் இதழ்களில் குறும்புடன் கூறிய புன்னகை  விரிந்தது.

ஆகாயம் தீண்டாத மேகம்Where stories live. Discover now