29

404 45 42
                                    

காலையில் விக்ரமின் முகம் பேய் அறைந்ததை போன்றிருந்தது. இரவு அவன் சரியாக தூங்காததால் அவன் கண்கள் சிவப்பேறி அவனைப்பார்க்கவே பயங்கரமாக இருந்தான்.இங்கு பிருந்தாவும் அதே நிலமையில் காணப்பட நன்றாக இருந்த குட்டையில் யாரோ கல்லெறிந்து விட்டார்கள் என்று மட்டும் புரிந்தது.ஆனால் அது யார் என்பதுதான் புரியவில்லை.

காலைக்கடன்களை முடித்து வந்த பிருந்தாவை விக்ரமின் தாய் சாப்பிட அழைக்க கவியும் பிருந்தாவும் ஒன்றாக சாப்பிட அமர்ந்தனர். விக்ரம் அங்கில்லாததை கண்ட பிருந்தா கவியிடம்

"அண்ணா எங்க கவி?" என்று கேட்க அவளோ இவளை முறைத்தாள்.

"அக்கா நான் உங்க மேல ரொம்ப மரியாதை வெச்சிருக்கேன். உங்கள பத்தி தப்பா பேச வெச்சிடாதீங்க"என்று கூற அவளுக்கு நேற்றைய சம்பவங்கள் கவிக்கு தெரிந்திருக்குமோ என்ற ஒரு எண்ணம் தோன்றியது.

"நேத்தைக்கு நீங்களும் அண்ணாவும் ஒன்னாதான் வெளியில போனீங்க. ஆனா வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறமா நீங்க இரண்டு பேரும் ஒருத்தர் முகத்தை மற்றவர் பார்க்குறத தவிர்ந்துகொள்ள டிரை பண்ணீங்க. ஆனா அப்ப கூட அண்ணா முகத்துல ஒரு சந்தோசம் இருந்தது. ஏன், ரொம்ப நாளைக்கு அப்புறமா அவரு முகத்துல ஒரு தெளிவ பார்த்தேன். ஆனா இன்னைக்கு காலையில அண்ணா முகத்த பார்க்க கூட முடியல. வெளியில போறேன்னு மட்டும் சொல்லிட்டு போயிட்டாங்க. எங்க போனாரு என்று கூட தெரியல.நேத்தைக்கு அப்படி என்னதான் நடந்திச்சி"என்று கேட்க பிருந்தாவுக்கு என்ன செய்வதென்பது புரியவில்லை. தான் ஒரு வேலை அவசரப்பட்டு விட்டோமோ என்று கூட பிருந்தாவுக்கு தோன்றியது.

"கவி ப்ளீஸ், நான் நேத்து என்ன நடந்ததுன்னு முழுசா சொல்லிடுறேன்"என்றவள் அனைத்தையும் கூறி முடிக்க இங்கு கவியோ பத்திரகாளியாக மாறிக்கொண்டிந்தால்.கவிக்கு என்ன சொல்வதென்று புரியாமல் பிருந்தாவை ஓங்கி அறைந்தவள் அறைக்குள் சென்றாள்.

இங்கு பிருந்தா என்ன நடக்கின்றது என்பது புரியாமல் வாழ்க்கையில் முதன் முறையாக ஒருவரிடம் அறை வாங்கியதாள் தன் கன்னம் வலிக்க அதை தன் கைகளால் கன்னத்தை வருடிக்கொடுத்தாள்.

ஆகாயம் தீண்டாத மேகம்Where stories live. Discover now