Nodi Nodiyai / நொடி நொடியாய்😉

150 16 3
                                    

சில நாட்கள் எனினும்
அவளை அவனும்
அவனை அவளும்
பார்த்து கொள்ளமால்
பல யுகங்கள் கடந்ததாக
எண்ணமே இருவருக்கும்..

கதவை திறந்து
கதிர் உள்நுழைவதை
காரிகை காணும்போது
கடந்த தருணங்களை
கனவென கலைத்து
அகம் மகிழ்ந்தாள்
முகமும் மலர்ந்தாள்..

அவன் விழிகள்
பார்க்கும் இடமெல்லாம்
பாவை அவளின்
பிரதி பிம்பமே..
மெய்யாய் இவள்
மெத்தையில் இருப்பதை
உணரும் பொழுது
உற்சாகம் கொண்டான்..

நிமிடங்கள் குறைந்தது
நாள் முடிவு அடைய
நொடிகளே மிச்சமென
நிலைமை மாற
தாமரை அவளை
தயக்கத்துடன் எழுப்பி
தயக்கம் இல்லாமல்
வாழ்த்து கூறினான்..

தன்னவன் தானாய்
தன்னிடம் வாழ்த்த
உவமை கூற இயலா
உள்ள மகிழ்வு
உடையவளாய் ஆனாள்
உதிர வண்ணத்துக்கு
முகம் மாற
மலர்ந்த முல்லை..

.
Sila natkal eninum
Avanai avalaum
Avalai avanum
Parthu kollamal
Pala yugakankal kadanthathaga
Enname iruvarukkum..

Kathavai thiranthu
Kathir ulnuzhaivathai
Karigai kanumpothu
Kadantha tharungalai
Kanavena kalaithu
Agam magizhnthal
Mugamum malarnthal..

Avan vizhigal
Parkkum idamellam
Paavai avalin
Prathi pimbambe
Meyyayai ival
Methaiyil iruppathai
Unarum pozhuthu
Urchagam kondan..

Nimidankal kurainthathu
Naal mudivadaiya
Nodikale michamena
Nilaimai maara
Thayakkathudan ezhupi
Thamarai avalukku
Thayakkame illamal
Vazhthu koorinan..

Thannavan thaanai
Thannidam vazhtha
Uvamai koora iyalaa
Ulla magizhvu
Udaiyavalai aanaal
Udhira vannathil
Mugam maara
Malarntha mullai..

ScribblesOnde histórias criam vida. Descubra agora