💗என் தாரா 💗6

30 0 0
                                    

. 💗 என் தாரா 💗

6

தாராவிற்கு வாசுவை பற்றி தெரியாது..... தன்னை ஒருவன் கிண்டல் செய்தததையும் அதனால் வாசு சண்டைக்கு சென்றதும் தெரியவே தெரியாது........

வாசுவின் நண்பன் கோபி யின் வீட்டிற்கு மேல் தான் அவர்களும் வசிக்கிறார்கள்....

தாரா வீட்டின் கீழ் வீடு கோபி வீடு ..... அவன் வீட்டிற்கு ஒரே பிள்ளை.... அப்பா ஃபாரினில் வேலை செய்கிறார்..... அம்மா அவுஸ்ஒயிஃப்.... அவர்களிடம் தாராவின் அம்மா நன்றாக பேசி வருகிறார்.... அதனால் கோபியை அவருக்கு தெரியும்...... வீட்டில் செல்ல பிள்ளை என்பதால் எதுவாக இருந்தாலும் கேட்டதும் அவனுக்கு கிடைத்து விடும்..... ஒரு மாலை நேரத்தில் பவர் கட் ஆனது..... தாராவிற்கு அன்று.... படிப்பதற்கான வேலை அதிகமாக இருந்தது.... இரவு ஏழு மணி ஆகியும் கரண்ட் வராததால் தாராவை அவர் அம்மா கீழே கோபியின் வீட்டில் விட்டு வந்தார்..... அங்கே அவன் வீட்டில் குட்டி மின் விளக்கு உள்ளது....

அப்போது கோபி வீட்டில் இல்லை .....

அவனும் டென்த் படிப்பதால் டூயூஷன் சேர்ந்து படிக்கிறான்.....

அங்கேயும் பவர் கட் என்பதால் பசங்க ஒரே சத்தமாக கதை பேசிக் கொண்டும்.... விளையாடிக் கொண்டு இருந்தனர்....அதனால் சீக்கிரம் வீட்டிற்கு அனுப்பி விட்டனர்...

தாரா தனது ஓம் ஒர்க்கை முடிக்கவும் .... கோபி வரவும் சரியாக இருந்தது.... தாரா விடம் ... கோபியை அறிமுகம் செய்தார் அவனது சேட்டைகள் பற்றியும் சொன்னார்..... அதை கேட்ட தாராவிற்கு சிரிப்பு வந்தது.....

அம்மா என்ன கலாய்ச்சது போதும் சாப்பிட எதாவது கொடுங்க என தாராவிடம் பேச ஆரம்பித்தான்.....

ஏய் குட்டி நீ என்ன படிக்கிறாய்....?

தாரா மனதில் என்ன இவன் நம்மளிடம் இப்போது தான் பேசுகிறான் ஆனால் உரிமையாக வேறு பெயர் வைத்து பேசுகிறான் என்று நினைத்து.... 8 th படிக்கிறேன் என்று சொன்னால்....

அவனும் முதல் தடவை பார்ப்பதை போல் இல்லாமல் அவளிடம் சகஜமாக பேசினான்.... கோபியை பார்த்ததும் தாரவிற்கும் பிடித்து விட்டது.... அவளும் வீட்டிற்கு ஒரே பெண் என்பதால் இருவரும் சீக்கிரம் நண்பர்கள் ஆனார்கள்.... அவர்களின் நட்பு நாளடைவில் வளரத் தொடங்கயது.....

அது எவ்வளவு தூரம் என்றால் தாராவை தனது பாசமலராக ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு..... தாரா பார்ப்பதற்கு குட்டியாக இருப்பதால் அவளை கோபி" குட்டி "எனவே அழைக்க ஆரம்பித்தான்.... அது தாராவிற்கும் பிடித்தது......

தாராவிற்கு ஸ்கூல் ...,படிப்பு..., என நாட்கள் சென்றது.....

இங்கு வாசுவோ..... தாராவின் நினைப்பிலே நாட்களை தள்ளிக் கொண்டு இருந்தான்.... வாசுவிற்கு கற்புரபுத்தி எது சொன்னாலும் உடனே புரிந்துக் கொள்வான்..... கணக்கில் அதி புத்திசாலி..... அதனால் அவன் டூயூஷன் எங்கும் செல்ல வில்லை.... வீட்டிலே படிக்கிறான்..... ஆரம்பத்தில் ஒழுங்காக படித்துக் கொண்டு தான் இருந்தான்..... ஆனால் அவன் என்று தாரைவை பார்த்தானோ.... அதிலிருந்து அவனது படிப்பில் கவனம் குறைந்தது...‌ தினமும் தாராவை பார்க்க முடியாத காரணத்தால் மிகவும் கவலையாக சுற்றி வந்தான்..... இப்படியே சென்றால் அவன் எதிர் பார்க்கும் ரிசல்ட் அவனுக்கு வராது..‌.... 😥😥😥

என்ன பண்ணப் போறானோ....!!!!🤔

கதை எப்படி செல்கிறது என படிக்கும் நீங்கள் ஒரு வார்த்தை சொல்லலாமே💕😆

Você leu todos os capítulos publicados.

⏰ Última atualização: Dec 29, 2020 ⏰

Adicione esta história à sua Biblioteca e seja notificado quando novos capítulos chegarem!

💗 என் தாரா 💗Onde histórias criam vida. Descubra agora