பெண்ணே நீ என்னை ஆட்சி செய்ய,
என் இதயத்தின் செங்கோல் உனக்கானதடி!
ஆயிரம் கண்கள் என்னைச் சுற்றினாலும்,
எந்தன் விழிகள் தினமும் உன்னை மட்டுமே காண சிறகடிக்கிறது.
அதை எப்படி சொல்ல!!!
கவிதை எனும் காதல் புறாவை தூது அனுப்பி,
உன்னைத் திருடியக் கள்வனாக உன் இதயம் எனும் கோட்டைச் சிறையில் ஆயுள் கைதியாகக் காத்துக் கொண்டிருக்கிறேன்!