ஏன் மாறினேன்!!!

84 17 43
                                    

                          🖤

நொடிக்கு நொடி துடிக்கும் என் இமைகள் உன்னைக் கண்டதும் உறைந்தது ஏன்?

மழலை மொழி மட்டும் கேட்டு ரசித்த என் செவிகள் இன்று உன் குரலுக்கு செவிமடுப்பது ஏன்?

இயற்கையை ரசித்து வியந்த என் விழிகள் இன்று நொடிக்கு ஒரு முறை உன் முகத்தை ரசிப்பது ஏன்?

உன் தொலைவினைக் கூட என் ஸ்பரிசம் உணர்ந்தது ஏன்?

என் கடிகார முட்களும் உன்னை எண்ணித் துடிப்பது ஏன்?

ஏன் என்ற என் கேள்விகளுக்கு என் மனம் சொன்ன பதிலும் ஏன் மட்டுமே!!!!

ஏன் என்ற என் கேள்விகளுக்கு என் மனம் சொன்ன பதிலும் ஏன் மட்டுமே!!!!

¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.
மௌனத்தின் ஓசைDonde viven las historias. Descúbrelo ahora