ஆதியில் ஆதவன் தன் வேலையை சிறப்புடன் தொடங்க வந்து விட்டார்... நம் ஆதியின் கண் ஆதவனை கண்டு தான் முழிக்கும்.
விரிவுரையாளர்ல(Lecturar )அதான் காலந்தவராமை🤣.(Punctuality)
அவர் எழுந்து அன்றாட வேலைகளை முடிச்சுட்டு ஆதவன பாக்க வந்துட்டார்.... வேற வேலை இல்லையானு கேக்க கூடாது.... ஆதியில்(First)இருந்தே ஆதி அப்டித்தான்.ஆதி : கனவின் நினைவே....
உன் நினைவு
கனவாய்
கரைந்துவிடுமோ? 🙄(என்னப்பா விரக்தியா? இல்ல என்னது? சரி பாத்துக்கலாம் )
கொஞ்ச நேரத்தில கல்லூரிக்கு நேரம் ஆய்டும். அதுனால கிளம்பிட்டார்.
ஆதி, ஆறடி உயரம், அழகான புருவம்., ஆளை மயக்கம் கண்கள்,
ஆண்களே வியக்கும் ஆடை, இப்படி இருந்த யார்தான் பாக்க மாட்டாங்க.... ஆனால் இவரு பாக்கணுமே... 😜மகிழுந்து(car)140 km வேகம் எடுத்து போய்ட்டு இருக்கு...
வானொலியில் 98.3 FMல
"என் கண்ணில் ஈரம் வந்தால்...
என் நெஞ்சில் பாரம் வந்தால்...
சாய்வேனே உன் தோளிலே... 🥺".
நீயே நீயே நானே நீயே... "பாடல் முடியுது.... கல்லூரி வளாகத்துல வந்து நிறுத்துறார்...
கதவை திறந்து வெளில வரார்... குளிரூட்டும் கண்ணாடியை (Cooling glass) கழட்டிடு உள்ள வரார்.. !பெண்கள்: யாப்பாடி.... !என்னே அழகு.. !விரிவுரையாளரா இல்லனா என் வாழ்க்கையில இருந்துடுப்பாரு...😂தவறிடுச்சே.... !
ஆதி இதல்லாம் கேட்டுட்டும் கேக்காத மாதிரியே கடந்து போறார்... அப்போ அவர்க்கு அழைப்பு வருது.
ஆதி : இப்போ யாரு? இப்போ தானா உள்ள வந்தேன்... !
போன் பாத்துட்டு.. அட நாம மங்குனி அமைச்சர்...ஆதி: சொல்லு மச்சான்... திருப்பதி போய்ட்டு வந்து திருப்பம் வந்துடுச்சு போல... 😂அதான் என்ன திரும்பி கூட பாக்கமாற்ற... !
அழைப்பில் : ஏன்டா நல்லவனே பக்கத்துல இல்லனு பேசாத டா.... வந்தேனா வார்த்தை வராது உனக்கு.... 😡
ஆதி : அட அமைதி மச்சான்... !கிளாஸ்க்கு நேரம் ஆயிடுச்சு... வந்து பேசவா...?