அத்தியாயம் 30

1.9K 65 4
                                    

ருத்ரன் சாதனா சாகித்யா இருவரும் சுற்றுலா செல்வதற்கு சம்மதித்தான் ஆனால் அதற்கு ஒரே ஒரு நிபந்தனை விதித்தான் அவர்களும் அந்த நிபந்தனையை பின்பற்றுவோம் என்று உறுதியளித்து விட்டு மகிழ்ச்சியாக உறங்கச் சென்றனர்.

மறுநாள் கல்லூரிக்கு சென்ற உடன் தங்கள் தோழிகள் அனைவரும் இருக்குமிடம் சென்று நாங்கள் இருவரும் கண்டிப்பாக சுற்றுலா வருகிறோம் என்று கூறினார்கள். அதைக் கேட்ட அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். சரியாக 15 நாளில் சுற்றுலா என்று முடிவாகி இருக்க அனைவரும் அந்த 15 நாட்களை மிகவும் மகிழ்ச்சியாக கடந்தனர் சுற்றுலா செல்வதற்கு முந்தைய நாள் தங்களுக்கு தேவையான அனைத்தையும் கடைகளில் இருந்து வாங்கி ஆளுக்கு ஒரு டிராவல் பேக்  தயார் செய்து வைத்திருந்தனர் சாதனா மற்றும் சாகித்யா.

இவர்கள் இருவரையும் கல்லூரியில் சென்று விடுவதற்காக ருத்திரன் சக்தி அசோக் மூவரும் வந்திருந்தனர் அவர்களின் கிளம்புவதற்கு முன்பு வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பத்திரமாக இருக்குமாறும் எங்கேயும் தனியாகச் செல்ல வேண்டாம் யாராவது ஒருவருடன் செல்லுங்கள் ஏதாவது பிரச்சனை என்றால் மறக்காமல் வீட்டிற்கு தெரிவித்து விடுங்கள் என்று சில அறிவுரைகளை வழங்கி போனை வைத்தனர்.

அதேபோல் இவர்களை கல்லூரியில் இறக்கிவிட வந்த மூவரும் அவர்களது தோழிகள் அனைவரையும் அழைத்து அறிவுரை வழங்கினார்கள்.

ருத்ரன் எவ்வளவு என்ஜாய் பண்ண முடியுமோ அவ்வளவு என்ஜாய் பண்ணுங்க ஆனா அதுலயும் ஒரு கவனம் இருக்கணும் பிரச்சனைகள் எப்படி வேண்டுமென்றாலும் வரலாம் அதனால உங்களை சுத்தி என்ன நடக்குது அப்படிங்கற விஷயத்தை கொஞ்சம் கவனமா பாத்துக்கோ டெய்லி போன் பண்ணுவேன் நீங்க ரெண்டு பேரும் மறக்காமல் பேசணும் புரியுதா அப்படி போன் ஆன்சர் பண்ணாம இருந்தீங்க அப்படின்னா அடுத்த கொஞ்ச நேரத்துல நாங்க இங்க கெளம்பி வந்துருவோம் சரியா" என்று முதலில் அனைத்தையும் பொதுவாக கூறியவன் கடைசி வரியில் மட்டும் சாதனா சாகித்யா இருவரையும் பார்த்துக் கூறினான்.

என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது)Where stories live. Discover now