பறவைகள் கீச் கீச் என ஒலி எழுப்ப சோம்பல் உடனே கண் விழித்தாள் ஸ்ரீ. என்னது இது! நம்ம பெர்சீட் போர்த்திட்டு தூங்கலையே? பதில் கிடைத்து விட்டது. ஓ சாரோட வேலையா? பரவாயில்லை! இவருக்கு நம்ம மேள அக்கறையிலாம் இருக்கு.
ஆனா என்னமோ ஒன்னு தடுக்குது. அவருக்கு நாம ஃபர்ஸ்ட் நம்பிக்கையை குடுக்கனும்.எழுந்து அவன் அருகில் சென்று, யூ சோ ஸ்வீட்! உம்மா! அவனிடம் அசைவு தெரியவும், வேகமாக பாத்ரூம் சென்று மறைந்தாள்.
குளித்து முடித்து சேலை அணிந்து, நெத்தியில் குங்குமம் வைக்கும் போது, ''நமக்குள்ள எல்லாம் சரி ஆன பிறகு நீங்கதான் எனக்கு டெய்லி யும் குங்குமம் வச்சு விடனும்" மானசீகமாக தனக்குள்ளே பேசிக்கொண்டாள்...
அவன் தான், இரவு தண்ணீர் தாகம் எடுக்கவும் லைட் ஆன் பண்ணும் போது, கீழே ஏசி குளிரில் நடுங்கி கொண்டிருந்தாள்...
ஏசியை குறைத்து வைத்து, அவளுக்கு போர்வையை எடுத்து போர்த்தி விட்டான்....
பின்பு கீழேச் சென்று, யாரும் எழும்பாததால் அனைவருக்கும் காப்பி போட ஆரம்பித்தாள்....
அவள் காப்பியை கப்பில் ஊற்றும்போதே, தனம் வந்துவிட்டார். ஸ்ரீ நீ யேன் இதெல்லாம் பன்ற? இன்னைக்கு வேலைக்கு ஆள் வந்திருவாங்க..... சமையல் மட்டும் நானே பண்ணிருவேன்... மத்த வேலையெல்லாம் அவங்களே பாத்துப்பாங்க.. போ போய் ரெஸ்ட் எடு..
"அத்தை இதுல என்ன இருக்கு இதெல்லாம் எங்க வீட்டுல பண்றது தான"
"நீங்க என் மாமியார் அதை மறந்துறாதிங்க" .... "அதுக்கென்ன மாமியார் நா கொடுமை பண்றது தானா பாசமாலாம் இருக்க கூடாதா""என்ன மா நீங்க இப்படி பன்றிங்களேமா"
"அய்யோ அத்தை செம்ம இன்னொரு டைம் சொல்லுங்க ப்லீஸ் ப்லீஸ்" "போ போ உன் புருஷனுக்கு காப்பி எடுத்து ட்டு போ""இன்னொரு நாள் கண்டிப்பா சொல்றிங்க இந்தாங்க இது உங்களுக்கு" என்று அவர் கையில் ஒரு கப்பை கொடுத்தாள்....
அவனுக்கு காப்பி யை எடுத்து கொண்டு மேலே சென்றாள்...
நோட்டிபிக்கேஷன் சவுண்டு கேட்கவும், கைகளால் துழாவி செல்லை எடுத்து பார்த்தாள்.... ஜீவாவிடமிருந்து குட்மார்னிங் மெஜேஜ் வந்திருந்தது.
YOU ARE READING
ஆகாய விண்மீன் நீயடி
Romanceஅவள் தன் வாழ்வின் பொக்கிஷம் என்று தெரிந்திருந்தால் இழந்திருக்க மாட்டானோ என்னவோ!!!!!!!!!!!!!! ஒருத்தவங்க, '' நம்ம கூடவே இருக்கும் போது அவங்களோட வேல்யூ தெரியாது '' "இழந்து விட்டு பீல் பண்ணும் போது, அவங்க நம்மள விட்டு ரொம்ப தூரம் போயிருப்பாங்க"...