படியில் இருந்து இறங்கி வரும் தன் மருமகளேயே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் தன லக்ஷ்மி. சிம்பிளாகவும் இல்லாமல் கிராண்டாகவும் இல்லாமல் ஒரு காட்டன் சேரியை நேர்த்தியாக அணிந்து அதற்கு ஏற்றார் போல் காதில் ஸ்டட் கையில் அழகான பிரேஸ்லெட் கழுத்தில் புது தாலி மினு மினுக்க நெற்றியில் குங்குமம் புது பெண்ணிற்கே உரிய கலை யோடு படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தாள் ஸ்ரீ.
முடியை வேறு விரித்து விட்டு கிளிப் போட்டிருந்தாள். பார்ப்பதற்கே பாஸ் என்கிற தோரனையோடு அவ்வளவு அழகாக இருந்தாள் ஸ்ரீ.
அருகில் இருக்கும் தன் கணவனிடம் கண்ணை காட்டினார். அவரும் திரும்பி பார்த்து தன் மகனுக்கு ஏத்த ஜோடிதான் என சைகை காட்டினார்.
நேராக டைனிங் டேபிள்க்கு சென்று தன் அத்தை யிடம் "அத்தை நா இந்த சேரி ல எப்படி இருக்கேன்"
"நல்லா இருக்க அப்படியே சும்மா கெத்தா என் மகனுக்கே பாஸ் மாறி இருக்க"
"அத்தை சும்மா கிண்டல் பண்ணா திங்க அட நிஜமா என் கண்ணே பட்டு டும் ஸ்ரீ மா நயந்தாரா வுக்கே டப் குடுத்துடுவ அவ்வளவு அழகா இருக்க"
"நிஜமா வா" என கேட்டு வெட்க பட்டு தலையை கீழே குனிந்து கொண்டாள்.
அதை பார்த்து தனம் சிரித்து விட்டார். அவளை சேரில் அமர வைத்து அவரே அவளுக்கு இட்டிலியை பிட்டு ஊட்டி விட்டார்.
அவரின் பாசத்தை கண்டு ஸ்ரீ க்கு கண்கள் இரண்டும் கலங்கி விட்டது. அவள் கண்ணில் கண்ணீரை பார்த்த உடன் எனக்கு நீயும் இன்னொரு மகள் தான் ஸ்ரீ என அவள் உச்சந்தலையில் முத்தமிட்டார்.
அப்போது தான் சாப்பிட வந்த கீது "இந்த பாச மழை ல என்னையும் சேர்த்து கோங்க பிளீஸ்"
"அடி வாலு பேசாம போ அங்கிட்டு"
"வந்துட்டா எங்களை காய்க்க"
"அண்ணி ஒன் செல்பி
இன்னைக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க "
YOU ARE READING
ஆகாய விண்மீன் நீயடி
Romanceஅவள் தன் வாழ்வின் பொக்கிஷம் என்று தெரிந்திருந்தால் இழந்திருக்க மாட்டானோ என்னவோ!!!!!!!!!!!!!! ஒருத்தவங்க, '' நம்ம கூடவே இருக்கும் போது அவங்களோட வேல்யூ தெரியாது '' "இழந்து விட்டு பீல் பண்ணும் போது, அவங்க நம்மள விட்டு ரொம்ப தூரம் போயிருப்பாங்க"...