விண்மீன் 5

15 2 0
                                    

அறையில் அவன் யார் கூடவோ ஃபோனில் பேசி கொண்டிருந்தான்.

இவளை பார்த்துவிட்டு  ஐ வில்  கால் யூ பேக் என்று கட் செய்தான்.

இவள் அருகில் வந்து  உன் பேரு என்ன? ஹான் கவி ஸ்ரீ.

இவருக்கு நம்ம நேமே தெரியல
இதுல எங்க குடும்பம் நடத்துரது.

ஹேய் எவ்ளோ நேரமா உன்ன கூப்பிடுறது? என்ன யோசிச்சுட்டு இருக்க? நேங் என்று முழித்தாள்.

ஒன்னும் இல்லங்க, என்று அழகாக சிரித்தாள். ஒரு நிமிடம் மயங்க தான் செய்தான். தலையை கோதிக்கொன்டு   உன்னோட டிரஸ்  அப்புறம் மத்த திங்க்ஸ் லாம்
இந்த கப்போர்ட் ல வச்சுக்க.

சரிங்க. என்று துணிகளை எடுத்து அடுக்க ஆரம்பித்தாள். அவன் குளிக்க சென்று விட்டான்.

அடுக்கி முடித்ததும் அவள் அணிந்திருந்த நகைகள் கன மாக இருப்பதால் ஒவ்வொன்றாக  கலட்ட ஆரம்பித்தாள். ச்சே! இந்த சேலை ஒரே கசகசனு இருக்கு. ஒரு நாள் கட்டுன நமக்கே இப்படி இருக்கு இத எப்படி தான் டெய்லி வியர் பண்றாங்களோ தெரியல. ட்ரஸ்ஸிங் ரூமில் சேலையின் பின்னை அகற்றி கொண்டிருந்தாள். திடிரென்று கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான். அய்யோ சரிங்க. லாக்  பன்ன மறந்துட்டேன். என்று திரும்பி நின்று கொண்டாள்.

என்ன என்னைய மடக்க ஃபர்ஸ்ட் ஸ்டெப்பா? இதுக்கு லாம் நா மயங்க மாட்டேன்.

என்ன சொல்றிங்க எனக்கு ஒண்ணும் புரியல.

புரியாத மாறி நடிக்காத. பணத்துக்காக தான என்ன கல்யாணம் பண்ணிருப்ப.
என் பக்கதுல வர கூட நினைக்காத.
நான் ஆதி கதிரவன். என்ன பொருத்த வரைக்கும், என் அம்மா அப்பா காகதான் இந்த கல்யாணம்.
வெளிய மட்டும் தான் நாம ஹஸ்பண்ட் அன்ட் வைப். அண்டர்ஸ்டேன்ட்! என்று வெளியேறி விட்டான்.

ஸ்ரீ க்கு கண்கள் இரண்டும்  கலங்க ஆரம்பித்தன. அப்படியே தொப்பென்று அமர்ந்து விட்டாள்.
என்ன வார்த்தை சொல்லிட்டாரு. பணத்துக்காகதான் நா கல்யாணம் பண்ணிக்கிட்டேனா?

ஆகாய விண்மீன் நீயடிUnde poveștirile trăiesc. Descoperă acum