காதல் திரை - 2

49 6 1
                                    

என்னாச்சி மேடம்? ஏன் இப்படி காலையிலே-யே அப்சட்-ல இருக்கீங்க? என தியா கேட்க...

அவள் அருகில் கிடந்த, நியூஸ் பேப்பரை எடுத்து அவள் முன் நீட்டினாள் ஸ்ரீநிதி...

அதில் அவள் வெள்ளித்திரை பக்கத்திற்கு போக. அதில் நேற்று.. ஆதி-யும், இவளும் சேர்ந்து போனதை வைத்து அவரவர் கற்பனைக்கு ஏற்ப கதை எழுதிப் போட்டிருந்தனர்... அதில்! பிரபல நடிகை, பிரபல இயக்குநருடன் ரகசிய சந்திப்பு!!! ரீல் படத்திற்காகவா? இல்லை ரியல் லைப்பிற்காகவா? என ஹெட்லைன் போட்டு சில வரிகளை கிறுக்கியிருந்தனர்...

அப்படி-யே தெரியாமல், அவள் பின் பக்கம் திருப்ப... அதில்! தீரேந்திரனின் தீரா ஆட்டம்! என தலைப்புச்செய்தியைப் பார்த்ததும். தியா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்...

ஏய்.. இப்ப எதுக்கு நீ சிரிக்கிற? என ஸ்ரீநிதி கோவமாய் கேட்க...

ஐயோ.. ஐயோ.. இல்ல மேடம்... ரெண்டு வரியில.. உங்க பேர்-கூட சொல்லாம போட்ட நியூஸை பார்த்தே நீங்க இப்படி அப்சட்-டா இருக்கீங்களே? இங்கப்பாருங்க.. தமிழ்-ல மட்டுமில்ல.. ஹிந்து பேப்பர்-ல கூட இவரு நியூஸ் தான்... என தீரனின் செய்தியை எடுத்துக் காமித்தாள் தியா...

அதைப்பார்த்ததும் அவள் முகம் சுழிக்க... மேடம் உண்மைய சொல்லனும்-னா? நீங்க நம்ம தீரா சார்-க்கு தேங்க்ஸ் சொல்லனும்... என தியா சொல்ல..

எதுக்கு? என புரியாமல் ஸ்ரீநிதி கேட்க...

ஆமா மேடம்... இவர் நியூஸ் டாப்-ல இருக்கிற வரைக்கும் உங்க நியூஸ் எல்லாம் பக்கத்து வீடு வரைக்கும் கூட போகாது... இன்னும் ஒரு மாச கண்டன்ட் இவர்தான்... இனிமேல்... இவர் பர்ஸ்ட் லவ்.. செகன்ட் லவ்-வு.. பிளாப் மூவி, ஹிட் மூவி-ன்னு எல்லாத்தையும் மறுபடியும் முதல்-ல இருந்து கண்டுப்பிடிச்சி.. நியூஸ் ஆர்டிகிள்-னு இவரைத்தான் சுத்தும். சோ நீங்க கவலைப்படாதீங்க என தியா சொல்ல.. அப்போதே... அவன் புகைப்படத்தை பார்த்தாள்... தீடீரென! அந்த ரசிகன்.. தீரா சாருடன்! ஒரு படம் சேர்ந்து பண்ணுங்க-ன்னு கேட்டது நினைவில் வர...

ஏன் பெண்ணென்று பிறந்தாயோ?Where stories live. Discover now