திருப்பம்

272 61 16
                                    

Office - 20

முல்லை:என்ன ஏமாத்திடுவியா

கதிர்:.......

முல்லை:கதிர்....கதிர்...

கதிர் கோவமாக போனை வைத்துவிட முல்லை அவனுக்கு மீண்டும் போன் செய்ய அழைப்பு ஏற்கப்படவில்லை.

கதிருக்கு தன்னை பிடிக்காமல் போய்விட்டது என எண்ணினாள் முல்லை.

இவ்வாறு ஆகவே 15 நாட்கள் கடந்தது. கதிர் முல்லையின் msg க்கும் பதில் அளிக்கவில்லை. போனையும் எடுக்கவில்லை

முல்லையை பார்க்க பார்வதி வருகிறார் சென்னைக்கு.

முல்லை : அம்மா 😭

பார்வதி : என்னடி ஆச்சு

முல்லை : கதிர் என்ட பேசவே மாட்றாருமா... எனக்கு பயமா இருக்கு.

பார்வதி :  பயப்புடாதடி... எல்லாம் சரியாகிடும்

முல்லை : அம்மா 15 நாள் ஆகுதுமா.... என்மேல கோவமா இருக்காரு போல

பார்வதி : அதெல்லாம் இருக்காது.. நீ எதுவும் தப்பா யோசிக்காத

முல்லை : அம்மா.... அப்பா என்ன சொன்னாரு

பார்வதி : அவரு என்ன சொல்ல போறாரு உன் மேல கோவமா இருக்காரு

முல்லை : அப்பா ஒத்துக்கவே மாட்டாரா.

பார்வதி : அதவிடு.. சரி... நீ போய் ரெடியாகு நாம கோவிலுக்கு போய்டு வருவோம்.

முல்லை: ஏதுக்கு

பார்வதி : உன்ன இப்படி அழு மூஞ்சா பாக்க எனக்கு பிடிக்கலடி... போ.. போய் கிளம்பு

முல்லை : சரி வறேன் இரு

இருவரும் கிளம்பி ஆட்டோவில் செல்ல

ஆட்டோ நின்ற இடம் ரிஜிஸ்டர் ஆபிஸ்

முல்லை : அம்மா இங்க ஏதுக்கு

பார்வதி : உள்ள வாடி முதல்ல... அப்புறம் சொல்றேன் எல்லாம்

முல்லை உள்ளே செல்ல தன் அத்தையை தவிர மொத்த குடும்பமும் அங்கே இருக்க அதிர்ச்சி அடைந்தாள் முல்லை...

சிரித்த முகத்துடன் முல்லையின் முன் தோன்றினான் கதிர்...

தன்னையும் அறியாமல் வேகமாக ஓடியவள் கதிரை இறுக கட்டி கொண்டு அழுதாள்..

Office (Stopped)Where stories live. Discover now