உயிர் - 12

17 0 0
                                    


ஷ்யாம் வீட்டில் காரை பார்க் பண்ணிவிட்டு உள்ளே நுழையும் போது துர்க்கா ஹாலில் பார்த்து கொண்டிருக்க... ருக்மணி கிட்சனில் ஷ்யாம் வரும் நேரத்தை கணக்கிட்டு அவனுக்கு டீ தயாரித்து கொண்டிருந்தார்.

"ஹாய் பட்டு எக்ஸாம் எப்படி எழுதியிருக்கே?..." என்று கேட்டுக்கொண்டே அவள் அருகில் அமர்ந்தான்.

"நல்லா எழுதியிருக்கேன் அண்ணா"

"இந்த எக்ஸாம்ஸ் முடிந்த பிறகு உனக்கு ப்ராஜெக்ட் மட்டும் தானேடா. ஆபீஸ் வர ஆரம்பிச்சிருவேல்ல?. பிரகாஷ்ட்ட சொல்லி வச்சிட்டேன் . அவன் உனக்கு ப்ராஜெக்ட்க்கு எல்லா ஹெல்பும் பண்ணிடுவான். அதோட நம்ம கம்பெனி பற்றி எல்லாமே உனக்கு சொல்லி கொடுத்திருவான். மோஸ்ட்லீ நான் நெக்ஸ்ட் மந்த் லாஸ்ட்ல யு.எஸ் போற மாதிரி இருக்கும். நம்மகிட்ட அக்ரீமெண்ட் கம்பெனிக்கு அங்க போய் எல்லாம் செட் பண்ணி கொடுதுட்டோம்னா பின்னாடி நாம இங்கிருந்தே சப்போர்ட் பண்ணினா போதும். அதுக்கு நான் போனா தான் சரி வரும். நான் அங்க போயிட்டு வரும் வரை நீ, பிரகாஷ் அண்ட் விஷால் மூணு பேரும் தான் இங்க பார்த்துக்கணும்"

"ஓகே அண்ணா"

அங்கு டீயுடன் வந்த ருக்மணியிடம் "அம்மா! அப்பா எங்க?" என்று கேட்டுக்கொண்டே அவரிடமிருந்து டீயை வாங்கி பருக ஆரம்பித்தான்.

"அப்பா அவர் கூட வேலை பார்க்கிற ஸ்டாப் ஒருத்தருக்கு உடம்பு சரியிலேன்னு பார்க்க போயிருக்கார். எப்படியும் வர லேட் ஆகும். ஏன்டா பிரகாஷ் வீட்டிற்கு அப்பாவும் வரணுமா?" என்றார்.

ஷ்யாம் அவசரமாக "இல்லைம்மா நாம மூணு பேர் மட்டும் போனா போதும். நான் தெரிஞ்சுக்க தான் கேட்டேன்" என்றான்.

அவன் செய்யும் வேலைக்கு அப்பா கூட வந்தால் சரி வருமா? அவனே அவரை எப்படி கழட்டி விடலாம்னு யோசனையில் இருந்தான். கடவுளே தனக்கு உதவி செஞ்சுட்டார் என்று மனதிற்குள் கடவுளுக்கு நன்றி சொல்லி கொண்டான்.

ருக்மணி "ஆமா ஷ்யாம் இப்போ என்ன அவசரமா பிரகாஷ் வீட்டிற்கு போகணும்னு கிளம்புற?" என்றார்

உயிராக வருவாயோ உறவே!!Tempat cerita menjadi hidup. Temukan sekarang