16. அஜீஷ்!

311 7 0
                                    

2 வாரங்கள் சென்றது.

வெள்ளி கிழமை காலை 7 மணி.

ரவி சிவாவுக்கு போன் செய்தான்.

"ஹலோ.."

சிவாவின் குரலில் இருக்கும் வழக்கமான காதல் இல்லை.

"ஹாய் சிவா.. குட் மார்னிங்.. என்னடா தூக்கத்திலே இருந்து எழுப்பிட்டேனா?"

"இல்ல.. இப்ப தான் ப்ரஷ் பண்ணினேன்.." என சிவா சொல்லும் போது, பின்னணியில் பெண் குரல் கேட்டது.

ரவி, "சிவா.. யார்டா அது.. லேடி வாய்ஸ் கேக்குது..?" என்றான்.

சிவா இறுக்கமாக, "ரம்யா வந்திருக்கா.. ரூம்ல காபி வச்சிட்டு போறா.." என்றான்.

துணுக்குற்ற ரவி, "என்னடா.. எதுக்கு வந்திருக்கா? மறுபடியும் அத்தை ஆரம்பிச்சுட்டாங்களா?" என்றான்.

சிவா, "ரவி.. அம்மாவுக்கு உடம்பு சரியில்லை.. மூணு நாளா நல்ல காய்ச்சல்.. மாமா வந்து பாத்துட்டு போனார்.. ரம்யா இருந்தா நல்ல இருக்கும்னு அம்மா கேட்க.. அவரும் அவளை அனுப்பி வச்சிருக்கார்" என்றான்.

ரவி, "சிவா.. ஏதோ.. உள்குத்து இருக்கும் போல தோணுது.. பாத்து பத்திரமா இருந்துக்கோ.." என கூற,

சிவா எரிச்சலாக, "டேய்.. ஏன் நீ நெகட்டிவ்வா யோசிக்கிற? அம்மாவுக்கு உண்மையிலேயே உடம்பு சரியில்லை.. நான் தான் அவங்களை டாக்டர் கிட்ட டெய்லி கூட்டிட்டு போறேன்.. நீ எதாவது கற்பனை பண்ணி குழப்பிக்காதே.." என்றான்.

அதற்கு மேல் பேச விரும்பாத ரவி, "சரி, நான் வச்சுடறேன்.. நாளைக்கு பண்றேன், சிவா" என போனை வைத்து விட்டான்.

ரவிக்கு நடப்பது நல்லதாக படவில்லை.

=====

அடுத்த நாள்.

ரவி சிவாவுக்கு போன் பண்ணிய போது அவன் எடுக்கவில்லை.

சிறிது நேரம் கழித்து மறுபடியும் போன் பண்ணிய போது, ரம்யா தான் போனை எடுத்தாள்.

ரம்யா, "ரவி.. நான் ரம்யா பேசுறேன்.." என்றாள்.

"ஹாய் ரம்யா.. சிவா இருக்கானா? அவன் கிட்ட போன்ஐ கொடு" என,

இள நெஞ்சே வா!Where stories live. Discover now