21. ஜீவா!

291 7 0
                                    

அந்த வாரம் முழுதும் மூட் அவுட் ஆக இருந்த ரவிக்கு சீக்கிரமே ஒரு நல்ல செய்தி தேடி வந்தது.

சிவாவிடம் இருந்து போன்.

"லவ்வர்! ஒரு குட் நியூஸ்! நான் final year ப்ராஜெக்ட் பண்றதுக்காக சென்னை வரேன்.. இனி அடுத்த நாலு மாசம் அங்க தான்! எங்க தங்க போறேன்ன்னு கேளு.. தாம்பரம் முடிச்சூர்! உன் ஹாஸ்டல்க்கு ரொம்ப பக்கம்.. என்ன.. சந்தோஷம் தானே..? வர்ற ஞாயிற்று கிழமையே வரேன்.." என்றான் சிவா உற்சாகமாக.

அந்த உற்சாகம் ரவியை தொற்றி கொண்டது.

ரவி, "டேய்.. சிவா! நம்பவே முடியலை.. செம குட் நியூஸ் டா.. ரொம்ப ஹாப்பி.. வீட்டு அட்ரஸ் ஐ மெசேஜ் பண்ணு.." என்றான்.

ரவியின் மனசு ரெக்கை கட்டி பறக்க ஆரம்பித்தது.

'சிவாவுடன் இனி நெருக்கமாக இருக்கலாம்!'

எப்போது லீவுக்கு சென்றாலும் எதாவது ஒரு பிரச்சனை. ஆனால் அதையெல்லாம் மறக்கடிக்கும் விதமாய் சிவா சென்னை வரும் செய்தி ரவியின் காதில் தேன் வந்து பாய்வது விழுந்தது.

அந்த வாரம் மிக உற்சாகமாக கழிந்தது ரவிக்கு.

ரவி, 'எப்போது ஞாயிற்று கிழமை வரும்' என நாள் காட்டியை தவறாமல் பார்த்துக்கொண்டே இருந்தான். அந்த நாளும் வந்தது.

சரியாக 11.30 மணிக்கே சென்று, தாம்பரம் ரயில் நிலையத்தில் வரும் பல்லவன் ரயிலுக்காக காத்திருந்தான் ரவி.

ரயிலில் இருந்து இறங்கிய சிவாவை கண்டு உற்சாகமாக கட்டி கொண்டான் ரவி.

சிவா, "அப்பா வர்றேன்னு சொன்னார்.. வேண்டாம்னு சொல்லிட்டு நானே கிளம்பி வந்துட்டேன்.. கொஞ்சம் சதை போட்ட மாறி இருக்க.. முகமும் கொஞ்சம் பளபளன்னு இருக்கு.?" என்றான்.

"நீ வர்றன்னு சொன்னதால உண்டான happiness சிவா.." என்று வெட்கப்பட்டான் ரவி.

அவர்கள் ஒரு ஆட்டோ பிடித்து தாம்பரம் முடிச்சூரில் இருந்த வீட்டை அடைந்தனர்.

வீட்டில் வலது புறம் மாடி படிகள் இருந்தன.

சிவா முன்னே ஏற, ரவி பின்னே தொடர்ந்தான்.

இள நெஞ்சே வா!Donde viven las historias. Descúbrelo ahora