32. எதிர் நீச்சல்!

529 13 15
                                    

அடுத்த நாள் காலை.

ரவி ஆபீஸ் வந்த போது, சென்னை ஆபிசில் வேலை செய்யும் சாய்யிடம் இருந்து கால் வந்தது.

'சாய் எதற்கு எனக்கு போன் செய்கிறான்?' என யோசித்த ரவி, போனை எடுத்தான்.

"ஹாய் ரவி! எப்படி இருக்கீங்க..?"

"ஹாய் சாய்! நல்லா இருக்கேன்.. நீ எப்படி இருக்க?"

"நல்ல இருக்கேன் ரவி.. நீங்க செட்டில் ஆகிட்டீங்களா? Clients எல்லோரையும் மீட் பண்ணிட்டீங்களா?"

"ம்ம்ம்.. இப்போதைக்கு ஹோட்டல்ல தான் தங்கி இருக்கேன்.."

"ரவி.. நீங்க சென்னை ஆபீஸ் மேனேஜர் கிட்ட பேசினதை நான் எதேச்சையா கேட்டேன்.. நீங்க என்னை ஆன்சைட்க்கு recommend பண்ணினதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.. அதை சொல்ல தான் நான் கால் பண்ணினேன்.."

ரவிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

"உனக்கு எப்படி தெரியும் சாய்? நானும் மேனேஜரும் பேசினது confidential!"

"ஸாரி ரவி.. மேனேஜர் conference ரூம் போன்ல ஸ்பீக்கர் போட்டு பேசிட்டு இருந்தார்.. நான் அங்க வந்தப்ப காதுல விழுந்துச்சு.."

"ஓகே.. Very important சாய்.. நீ யார் கிட்டையும் இதை சொல்ல கூடாது.. நான் உன்னை recommend பண்ணினது உன்னோடperformance ஐ வச்சு தான்.. நான் favoritism பாக்க மாட்டேன்.. you understand right?"

"எஸ் ரவி.."

"ஓகே.. தேங்க்ஸ்.. ஒர்க்ல focusஆ இரு.. விசா கிடைச்ச உடனே நீ இங்க வந்திடலாம்!"

"ஓகே ரவி.. தேங்க் யூ"

ரவி போனை வைத்து விட்டான்.

---------------

அந்த வாரம் சனிக்கிழமை.

காலை 9 மணி.

பாஸ்கர் ரவியை பார்க்க ஹோட்டலுக்கே வந்து விட்டார்.

"ரவி, இன்னொரு ப்ராஜெக்ட்ல ஒரு தமிழ் பையன், பேரு உதய்.. அவன் அப்பார்ட்மெண்ட் ரூமை ஷேர் பண்ணிட்டு இருந்த ரூம்மேட், இப்ப வேற இடம் போயிட்டான் போல.. அந்த அப்பார்ட்மென்ட்டை நீங்க ஷேர் பண்ணிக்க ரெடியா..? அவன் கிட்ட பேசிட்டு வந்திருக்கேன்.. உங்களுக்கு ஒகேன்னா things ஐ pack பண்ணுங்க.. இப்பவே கிளம்பிடலாம்.."

இள நெஞ்சே வா!Where stories live. Discover now