ரவி சுதாரித்து எழுந்து கொண்டான். அவன் உடல் நடந்த சம்பவத்தால் மெல்ல நடுங்கியது.
'சிவா எப்போது உள்ளே வந்தான்?'
பரத், சிவாவிடம் போராடி கொண்டிருந்தான். சிவா விடாமல் பரத்தின் முகத்தில் குத்து குத்த, அவன் முகம் சிவந்து போனது. மூக்கில் இரத்தம் வழிந்தது.
"ரவியை அடிச்சா கேக்க ஆள் இல்லைன்னு நெனச்சியா? நான் இருக்கேன்டா! இப்ப அவன் மேல கை வை பாப்போம்!" என்று கருவி கொண்டே பரத்தை காலால் நன்கு மிதித்தான் சிவா.
'ரவிக்கு நான் இருக்கேன்டா!'
சிவா சொன்ன சொல்லால் ரவிக்குள் உணர்ச்சி அலைகள் உண்டாகி கொந்தளிக்க, அவன் கண்கள் கலங்கின.
"யோவ்.. விடுயா.. நான் அப்பறம் போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணுவேன்..!" - என பரத் மூச்சு வாங்கி கொண்டு சொல்ல, ரவி வேகமாக வந்து சிவாவின் கையை பிடித்தான்.
"சிவா.. போதும்.. அவனை விட்ரு!"
சிவாவின் கோபம் அடங்கவில்லை.
"ரவி இல்லைன்னா நீயும் உங்கொம்மாவும் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு சிங்கி அடிச்சிருக்கணும்.. எனக்கு எல்லாம் தெரியும்! உங்கம்மா உனக்கு வேலை வாங்க எங்க வீட்டுக்கு நடையா நடந்தாளே! ரவி பரிதாபப்பட்டு உனக்கு வேலை வாங்கி கொடுத்தா, அவனையே அடிக்கிறியோ? நீயெல்லாம் உப்பு போட்டு தான சோறு திங்கிறியா? இல்ல வேற எதையாவது திங்கிறியா? உன்ன மாறி யாராவது நடந்துக்குவாங்களா? அரை லூசு கூதி.. முட்டா புண்டை! இன்னொரு தடவ ரவி வீட்ல உன்ன பாத்தேன், மிதிச்சே கொன்னுடுவேன்.. ஓடி போ!" என்று கூறி பரத்தை இன்னொரு மிதி மிதித்தான்.
பரத் தடுமாறி எழுந்து, ரவியின் பார்வையை காண விரும்பாமல் வேகமாக வீட்டை விட்டு வெளியேறினான்.
சிவா, "ரவி என்னடா இவன்.. சரியான சைக்கோ புண்டை.. இவனை இனி உள்ள விடாத!" என்றான் மூச்சு வாங்கி கொண்டே.
ரவி வேகமாக வந்து சிவாவை இறுக்கமாக கட்டி கொண்டான்.
"சிவா..! நான்.." - ரவிக்கு பேச்சு வரவில்லை. உணர்ச்சிகள் தொண்டையை அடைக்க, கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
YOU ARE READING
இள நெஞ்சே வா!
Teen Fiction🔞🔞🔞🔞🔞🔞 For mature readers only. This is a gay erotica. All characters that have sex are 18+ aged. 🔞🔞🔞🔞🔞🔞 ரவி ஒரு கூச்ச சுபாவமுள்ள, 18 வயது நிரம்பிய, 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவன். அவனது ஓரின ஈர்ப்பும், பதின் பருவத்துக்கே உரிய உடல் மற்று...