கெட்டதிலும் ஒரு நல்லது

28 0 0
                                    

வறுமையில் வாடிய புலவர், தன் மகன் குமரனுடன் மன்னரைக் காணச் சென்றார். அவரைப் புகழ்ந்து பாடினார். மகிழ்ந்த மன்னர் பணமும், பட்டாடையும் வழங்க உத்தரவிட்டார். இதை விரும்பாத அமைச்சர் பழைய பட்டாடை ஒன்றைக் கொடுத்தார். புலவருக்கு வருத்தம்.
இதை கண்ட குமரன், மன்னரிடம் சென்று ''தாங்கள் அளித்த பொன்னாடையின் பெருமையை வார்த்தையால் சொல்ல முடியாது. ஒரு நந்தவன ஓவியத்தை அதில் அருமையாக வரைந்துள்ளனர்,'' என்றான்.
மன்னரும், ''ஆமாம், ஆமாம்'' என தலையசைத்தார்.

''இதோ மன்னா வண்ண மலர்களும், செடி, கொடிகளும் பூத்துக் குலுங்குவதைப் பாருங்கள்'' என்றான். அந்த ஆடையை கண்டபடி மடித்திருந்ததால் ஏற்பட்ட கோடுகளை அப்படி சொன்னான்.

அப்படியா என மன்னர் பார்ப்பதற்குள், பாருங்களேன். ஒரு பிஞ்சும் கூட இருக்கிறது என்றான்.

நைந்து கிழிந்த இடத்தை அப்படி குறிப்பிட்டான். மன்னர் துணியைப் பார்த்து அதிர்ந்தார். இருப்பினும் கெட்டதையும் அறிவுக்கூர்மையுடன் வெளிப்படுத்திய குமரனுக்கு ஒன்றுக்கு இரண்டாக பட்டாடையும், இரண்டு மடங்கு பணமும் வழங்கினார். புலவரை அவமதித்த அமைச்சரைக் கண்டித்தார்.  

கதைகள்.Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ