தெய்வப்பிறவிகள்.

23 0 0
                                    


விவேகானந்தரின் சீடரும் பாரதியாரின் குருவும் அயர்லாந்தைச் சேர்ந்தவரும் இந்தியாவை தாய்நாடாகக் கருதித் தொண்டு புரிந்த செம்மல். ஆன்ம உணர்வும் தேசத்தொண்டும் வாழ்வின் இரு கண்களாக கொண்டவர். வீரப் பெண்மணியாக வாழ்ந்த சகோதரி நிவேதிதை.

மத போதகர் சாமுவெல் - மேரிஇசபெல் தம்பதிக்கு 1867 அக்.28ல் பிறந்தவர் மார்கரெட் எலிசபெத் நோபெல். இதுதான் நிவேதிதையின் நிஜப்பெயர். சுறுசுறுப்பும், ஆவேசமும், விடாமுயற்சியும் மார்கரெட்டுக்கு இயல்பாக வாய்த்தன. இந்தியாவில் மதபோதகராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு நண்பர் சாமுவேலின் வீட்டிற்கு வந்திருந்தார். 

மார்கரெட்டைப் பார்த்து 'இவள் இந்தியாவுக்குச் சென்று அந்த மக்களுக்காகப் பாடுபடுவாள்' என்றார். திடீரென்று தந்தை இறந்ததும், தாய் மூன்று குழந்தைகளோடு வறுமையை எதிர்த்து வாழ படாத பாடுபட்டார்.

எப்படியோ மார்கரெட் கல்லூரியில் படித்தார். 17ம் வயதில் ஆசிரியர் பணி... பொன்னிறக் கூந்தல், நீலக் கண்கள். புன்முறுவல் பூத்த புதுநெருப்பைப் போலிருப்பார்இளம் வயதிலேயேமதத்தைப் பற்றிய தீவிரமான சிந்தனைகள் அவருக்கிருந்தன. அப்போது நேர்ந்த ஒரு சந்திப்பு தான் அவருடைய வாழ்க்கையின் நோக்கத்தை வடிவமைப்பதாய் இருந்தது. ஆம்... அதுதான் விவேகானந்தரின் தரிசனம்! தன்னுடைய ஆன்மிக ஞானத்தால் அமெரிக்காவைக் கலக்கிவிட்டு, இங்கிலாந்து வந்திருந்த விவேகானந்தரை மார்கரெட்டின் தோழி தன் வீட்டுக்கு அழைத்திருந்த போது தான் அந்த சந்திப்பு நிகழ்ந்தது. 

விவேகானந்தரின் தோற்றமும் பேச்சும் அவரைக் கவர்ந்தாலும், மார்கரெட்டுக்குஅவருடன் கருத்து வேறுபாடுகள் இருந்தன.விவேகானந்தர் மீண்டும் இங்கிலாந்து வந்து சில மாதங்கள் தங்கியிருந்தபோது, ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கவனித்தார். ஒருநாள் விவேகானந்தர் மார்கரெட்டிடம் நான் இந்தியப்பெண்களின் கல்வி மேம்பாட்டுக்காகச் சில திட்டங்கள் வைத்திருக்கிறேன். அதில் நீ எனக்குஉதவ முடியும் என்று நம்புகிறேன் என்றார்.

கதைகள்.Donde viven las historias. Descúbrelo ahora