இன்பமும், துன்பமும்

32 0 0
                                    


சந்தோஷத்தையும், துக்கத்தையும் சற்று விலகி இருந்து பாருங்கள்.
உண்மையானது உங்களுக்கு விளங்கும்.

ஒரு மனிதன் எப்போது தானிருக்கும் இடத்தையே விமர்ச்சிக்கிறான்.
காரணமென்ன? 

அவன் உடல், கண், காது, மூக்கு உணர்வதைத் தானே விமர்சிக்க முடியும்.

அவ்வாறு விமர்சிப்பது நேர்மறையான பாராட்டாகவும் இருக்கலாம்.
எதிர்மறையான விமர்சனங்களாகவும் இருக்கலாம்.

இரவு நேரத்தில் ஒரு மரத்தடியில் இருந்த மனிதன் அந்த மரம் காற்றில் பேயாட்டமிடுவதைக் கண்டு, காற்று அதிகமாக வீசுகிறதே என்று உணர்ந்தவன் பக்கத்து மரங்களைக் கண்டான். அவைக் காற்றில் அசைவதாய்க் கூட தெரியவில்லை. 

தானிருக்கும் மரத்திலேயே காற்று முழுவதும் வீசுவதாய் உணர்ந்தான்... 

ஆனாலும், அதை அறிய விரும்பினான். அதனால், பக்கத்தில் உள்ள மரத்திற்கு அடியில் சென்றான். அங்கும் காற்று பேயாட்டமிட்டதை உணர்ந்தான்..

சிறிது தூரத்தில் நின்ற அரசமரமும், வேப்பமரமும் சேர்ந்திருந்த இடத்திற்குச் சென்றால் அங்கும் காற்று வெளுத்து வாங்குகிறது. இப்போது தான் கடந்து வந்த இரண்டு மரங்களையும் நோக்கினான். அங்கு காற்று அடிப்பதாகத் தெரியவில்லை. 

இதில் புதைந்துள்ள தத்துவத்தை சிந்தித்து உணர்ந்து வாழ்வீர்களாக...!  

கதைகள்.Donde viven las historias. Descúbrelo ahora