க்ஷத்திரியன்

15 0 0
                                    

மன்னர்களை க்ஷத்திரியர்கள் என அழைத்தனர். இந்த பெயர் வந்த காரணம் தெரியுமா? 

கிருத யுகத்தில் மக்களும் மன்னர்களும் தர்மம் தவறாமல் நடந்ததால் அப்போது காவல் துறை, நீதித் துறை என்ற அமைப்புகளே இல்லை.

பின் வந்த கலியுகத்தின் துவக்கத்தில் மக்கள் ஆசைக்கு அடிமையாகி அடித்துக் கொண்டனர். வேதம் படிப்பதையும் தர்மப்படி நடப்பதையும் கைவிட்டனர். படைப்புக் கடவுளான பிரம்மா ஒரு லட்சம் ஸ்லோகங்கள் கொண்ட 'தண்டநூல்' என்ற நூலை எழுதினார். இது தர்மத்தைக் கடைபிடிப்பதன் அவசியம் குறித்து சொல்கிறது.

இந்த நூலில் கூறப்பட்டுள்ளபடி பூமியில் ஆட்சி நடத்த ஒரு தலைவனை நியமிக்கும் படி பெருமாளிடம் தேவர்கள் வேண்டினர். அவர் தன் மானசீக புத்திரனான விரஜனை தலைவனாக்கினார். அவனது பரம்பரையில் வந்த 'பிருது' என்பவனின் பெயரால் பூமிக்கு 'பிருத்வி' என்று பெயர் சூட்டப்பட்டது. 

அவனது ஆட்சிக்காலம் பொற்காலமாக விளங்கியதால் அவனை 'க்ஷத்திரியன்' என மக்கள் அழைத்தனர். 

'க்ஷத்திரியன்' என்றால் 'நல்லாட்சி நடத்துபவன் எனப் பொருள். அதன் பிறகு வந்த எல்லா மன்னர்களையும் க்ஷத்திரியர்கள் என்றனர்.  

கதைகள்.Donde viven las historias. Descúbrelo ahora