"இரு... இன்னும் நான் முடிக்கவில்லை, உன் சொல்படி நடந்தால் பதிலுக்கு நீ என்ன தருவாய்?" என்று நைச்சியமாய் கேட்டான் மாதவ்.
"ம்... பெண்டாட்டியிடமே லஞ்சமா?" என்று முகம் சுளித்தாள் அஸ்வதி.
"பெண்டாட்டியிடம் தான் முக்கியமாக லஞ்சம் கேட்க வேண்டும்!" என்று கண்ணடித்தான் அவன்.
தலையிலடித்துக் கொண்டவள், "லஞ்ச ஒழிப்பு துறையிடம் போட்டு கொடுத்து விடுவேன், பீ கேர்ஃபுல்!" என்று சுட்டு விரல் நீட்டி மிரட்டினாள்.
"ஹஹா... அதற்கான ஆதாரத்தை எல்லாம் உன்னால் தயாரிக்க இயலுமா செல்லம்?" என்றவனின் உடல் வெடித்துக் கிளம்பிய நகைப்பில் குலுங்க ஆரம்பிக்க, முகம் சிவந்தவள் அவன் தலைமுடியை பிடித்து ஆட்டினாள்.
"யூ... ராஸ்கல், இந்த வாய் இருக்கின்றது பார். இப்படியே பேசிப் பேசி தான்டா என்னை நீ மடக்கி விட்டாய்!" என்று பொருமினாளா அல்லது பாராட்டினாளா என்பது அவளுக்கே வெளிச்சம்.
"ஏய்... சியாம் வீடு வந்து விட்டது, அத்தை சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கிறது இல்லை? ம்... அடக்கமான நல்லப் பெண்ணாக நடந்துக் கொள்ளப் பார்!" என்று அவளை சீண்டினான் மாதவ்.
ஐய்யே... என்று உதட்டை சுழித்து பழிப்பு காண்பித்தவளை கண்டு பெருமூச்செரிந்தவன், "ஹும்... இதை கொஞ்சம் ஊருக்கு ஒதுக்குபுறமாய் காட்டியிருந்தாய் என்றால் காரையாவது ஓரங்கட்டி நிறுத்தியிருப்பேன். இப்படி நட்ட நடு தெருவில் காண்பித்து என் கைகளை கட்டிப்போட்டு விட்டாயே அம்முகுட்டி!" என்று ஏகத்திற்கும் அவன் விசனப்பட,
"ச்சீய்... லூசு!" என கன்னம் சிவந்தவள், "ஆனால்... நான் ஃபிரியாக தான் இருக்கிறேன்!" என்று கண்ணடித்து அவனை நெருங்கி வேகமாக முத்தங்களை பதித்து விட்டு விலக, பதிலுக்கு முறைத்தவனை கண்டு நாக்கை துருத்தி அழகு காண்பித்தாள் அஸ்வதி.
வீட்டின் முன் காரை நிறுத்தி இவர்கள் இறங்கவும் முகம் கொள்ளா உவகையுடன் விரைந்து சியாம் அருகில் வரவும் சரியாக இருந்தது.
STAI LEGGENDO
அழகே அழகே... எதுவும் அழகே!
Narrativa generaleபுத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. "அழகே அழகே... எதுவும் அழகே! அன்பின் விழியில்... எல்லாம் அழகே! மழை மட்டுமா அழகு? சுடும் வெயில் கூட ஒரு அழகு! மலர் மட்டுமா அழகு? விழும் இலை கூட ஒரு அழகு!" பாட்டிலேயே புரிந்திருக்கும் எ...
