விடியற்காலை ஐந்து மணிக்கு எழுந்து தயாரான மாதவ் தன் தந்தை கோபாலிடம் நடந்ததை விவரித்து தன் விருப்பத்தை கூறினான்.
சில கணங்கள் அமைதியாக இருந்தவர், "மாதவ்! நான் என்றுமே எனது பிள்ளைகளின் விருப்பத்திற்கு மரியாதை கொடுத்து தான் இன்று வரையுமே நடந்து வந்துள்ளேன். ஆனால் அது சரியில்லை எனும் பொழுது தான் ஏற்றுக் கொள்ள பயமாக இருக்கிறது!" என்று சோர்ந்த குரலில் கூறவும், அவர் கரத்தினை ஆதரவாய் பிடித்துக் கொண்டான் மாதவ்.
"அப்பா... நடந்து முடிந்ததை எண்ணி கவலைப்படுவதில்லை ஒரு லாபமுமில்லை. நான் யாதவ் போன்றவன் இல்லை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். என் முடிவு என்றுமே தெளிவாக தீர்க்கமாக இருக்கும், ஸோ... என்னை பற்றி நீங்கள் என்றுமே பயம் கொள்ளவே தேவையில்லை. நிச்சயம் இத்திருமணத்தால் நம் வீட்டில் மகிழ்ச்சி தான் மலரும் யு டோன்ட் ஒர்ரி!" என்று மென்மையாய் புன்னகைத்தான்.
"ரொம்ப சந்தோசம்பா... நீயாவது நன்றாக மகிழ்ச்சியாக வாழ்ந்தால் அது போதும் எனக்கு!" என்றவரின் முகத்தில் நிம்மதி பிறந்தது.
அதன்பிறகு பத்மாவின் எண்களை அழுத்தியவன் அவரிடம் பேசி தன் விருப்பத்தை கூறி விட்டு ரோகிணியின் கைகளில் அலைபேசியை கொடுத்தான்.
இருவரும் தங்களுக்கு வேண்டிய விவரங்களை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டார்கள். பிறகு தனது தம்பி மூர்த்தி மற்றும் ஆனந்தியிடம் கலந்து பேசி விட்டு அரைமணி நேரத்தில் முடிவை சொல்வதாக லைனை துண்டித்தார் பத்மா.
சுபமான முடிவாக தான் வரும் என்பது கிட்டதட்ட உறுதி என்றாலும் ஏனோ மாதவுக்கு மனதில் அமைதி இல்லாமல் நெஞ்சில் ஏதோ ஒரு பாரத்தை ஏற்றி வைத்தது போல் லேசாக மூச்சடைத்தது.
அறையின் உள்ளே இருக்க முடியாமல் கதவை திறந்து கொண்டு வெளியே வந்து பால்கனியில் நின்றான். காலை நேர இதமான குளிர்காற்று மென்மையாக உடலில் மோதி இறுக்கமான மனநிலையை சற்றே குளிர்வித்தது.
![](https://img.wattpad.com/cover/113204012-288-k793124.jpg)
YOU ARE READING
அழகே அழகே... எதுவும் அழகே!
General Fictionபுத்தகமாகவும் மற்றும் அமேசானில் ebook ஆகவும் இந்நாவல் கிடைக்கிறது. "அழகே அழகே... எதுவும் அழகே! அன்பின் விழியில்... எல்லாம் அழகே! மழை மட்டுமா அழகு? சுடும் வெயில் கூட ஒரு அழகு! மலர் மட்டுமா அழகு? விழும் இலை கூட ஒரு அழகு!" பாட்டிலேயே புரிந்திருக்கும் எ...