அண்ணன் இந்த சொல்லுக்கு உறவாக இருந்தால் மட்டுமே உணர்வு புரியும்...
அண்ணன் என்ற உறவு
பாதுகாப்பு
அன்பு
அரவணைப்பு
கண்டிப்பு
இது அனைத்தையும் தரும் உறவு..(இணையத்தில் அண்ணன் என்ற உணர்வு சாதரணமாகி விட்டது போலியாக)
அவன் இது அனைத்தையும் மீரிய ஒர் உறவு..
தனக்கு பிடித்த படிப்பையும் படிக்கவில்லை அவன் தனக்கு பிடித்த உறவுகளும் அவன் பக்கமில்லை.
அழகிலும் பாசத்திலும் அற்புதமான அவனுக்கு பெயர் வைக்கீறார்கள் தன் குழந்தெய்வ பெயரை...
சொரிமுத்து என்று.(திருநெல்வேலியில் கரையாரில் பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் )அவன் பெயர் போல் அந்த கடவுளும் பெற்றவர்...
வீட்டில் இருக்கிற எல்லாருக்கும் அவன் தான் மூத்த ஆண் மகன் குடும்பத்தில் மூத்த ஆண் மகன்...
அவன் வரவை கண்டு தாய் பெற்ற மகிழ்ச்சி இதோ
எங்கு இருந்தியடா இவ்வளவு நாட்கள்
எங்கள் புன்னகை பூக்க செய்ய வந்தனவே
தன் தந்தை சுமையை குறைக்க வந்தனவே
என் கருவறை இருள் கண்டு பயம் காணாது என்னுள் இருந்து வந்தனவே
உன் அழகு கண்டு என்னை மறக்கிறேன் விழி மூடி நீ உறங்கும் உன் தாயாக நான் தான் எந்த ஜென்மத்திலும்அந்த காலத்தில் அருகில் தந்தையில்லாமால் ஒரு குழந்தையை வளர்ப்புது கடினம் அதிலும் இருவர் யோசித்து பாருங்கள் உலகம் கேள்வியும் கேளியும் செய்யும்
அதையும் தாண்டி வளர்தவள் அன்னை...
ஆனால் அவனுக்கு தான் மனதில் சிறு உளைச்சல்..தன் பெற்றோரை விட தன்
நட்பு பெரியது என்று நம்ப தொடங்கினான்... அம்மாவிடம் பகிரதவைகள் அனைத்தையும் நண்பருடன் பகிர்ந்தான்....ஆனாலும் அவன் செல் பிள்ளை குடும்பத்திற்கு...
பத்தாம் வகுப்பு வரை தன் ஊரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கிறான் அங்கு தன்னை மட்டும் தட்டி பேசும் ஆசியார்கள் தான் அதிகம். (எல்லாம் தன் மாணவர்கள் தான் என்று எந்த ஆசிரியர்களும் இதுவரை வரை நினைத்தும் இல்லை)...
YOU ARE READING
என் அன்பு தோழா
General Fictionவணக்கம் தோழர்களே, உலகிலே அதிசயாமான நிகழ்வு 46 குரோமோசோம்களும் தன் இடம் சேர்ந்து செல்லாகி திசுவாகி சதையாகி பிறக்கும் ஒரு உயிர் தான். எவ்வளவு தான் நட்பு,காதல் சிறந்தது என்று சொன்னாலும்;நமக்கு ஒரு பிரச்சினை என்று வந்தால் துடி துடித்து போவது இவர்கள் தான...