என் அன்பு தோழா பயணம் இதோ...
சிறு வயதில் சாலையில் நின்று அரட்டை அடித்தால் தண்டிப்பதும்
வீட்டில்,
உணவு உண்ணும் போது
அவனுக்கு வை மா என்று
பாசம் காட்டும் உறவு. அண்ணன்அண்ணன்,
உறவுகளில் முதல் ஆனாவன்...
பாசத்தை பகிர தெரியாதவன்...
தாய் இல்லா நேரங்களில் தாயுமானவன்....அதிகாலை நான்கு மணிக்கு டக் டக் என்ற கதவை யாரோ தட்டும் சத்தம் வெளியே எழுந்து போய் பார்த்தால் பக்கத்து வீட்டு காரர் அவர் ஒன்று சொல்ல எங்களால் நம்ப முடியவில்லை.
காலையிலருந்து உங்கள் ஓடி நல்ல சாப்பிட்டு உங்கள் கண் முன் வாழ்ந்து கொண்டு இருக்கும் உங்கள் 28 வயது மதிக்க தக்க ஒரு வாலிபர் உங்கள் குடும்பத்தில் ஒருவர்.
தீபாவளி அன்று விட்டு விட்டு பெய்யும் மழையில்
இரவு தன் நண்பன் டீ கடையில் நண்பனுக்காக உதவி செய்து
கொண்டு இருக்கும் அந்த ஒருவர்.தீடீரென உட்காந்திருக்கும்
சேரில் இருந்து தவறி விழுகிறான்.அவன் நண்பர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அருகில் இருக்கும் மெடிக்கல்காரரின் வீட்டை அனுகி உதவி கேட்கிறார்கள் அவர்கள் வீட்டு அருகில் தான் அன்பு தோழன் வீடும் பெற்றோருக்கு சொல்லாமல் சரி செய்து விடலாம் என்று நினைக்கிறார்கள்.
ஆனால் மருத்துவர் வந்து பார்த்துவிட்டு ஆஸ்பத்திரி கொண்டை போங்கனு சொன்னதுக்கு அப்புறம் அவர் வீட்டுக்கு சென்றார்கள், அங்கு அவர் பெற்றோர்கள் உறங்கி கொண்டு இருந்தவர்கள் இவன் தான் வந்துவிட்டான் என்று கதவை திறக்க
அவர் அம்மா அப்பா தம்பியிடம் சொல்கிறார்கள் அவன் உடல் நிலை சரி இல்லை என்று...(ஒரு சிறு கற்பனை கொள்ளுங்கள் உங்கள் மனதை புண் படுத்த அல்ல)
ஆம்புலன்ஸுக்கு கால் பண்ணி வந்தவுடன் அவனை ஏற்றி அம்மா தன் மடியில் அவன் தலையை வைத்து கொண்டு ஒரு கையை தலையிலும் மறு கையை அவன் இதயதுடிப்பின் மேலையும் வைத்து கொள்கிறாள்.
ESTÁS LEYENDO
என் அன்பு தோழா
Ficción Generalவணக்கம் தோழர்களே, உலகிலே அதிசயாமான நிகழ்வு 46 குரோமோசோம்களும் தன் இடம் சேர்ந்து செல்லாகி திசுவாகி சதையாகி பிறக்கும் ஒரு உயிர் தான். எவ்வளவு தான் நட்பு,காதல் சிறந்தது என்று சொன்னாலும்;நமக்கு ஒரு பிரச்சினை என்று வந்தால் துடி துடித்து போவது இவர்கள் தான...