என் அன்பு தோழாவின் பயணங்கள் இதோ....
அவனைப் போல அன்பு காட்ட எவரும் இல்லை எங்கள் குடும்பத்தில்,அவன் போல் கண்டிப்புடன் இருக்கவும் முடியாது.
அவன் ஒற்றை பார்வை போதும் வீட்டில் அனைவரும் அடங்கி விடுவோம்.
கோவில்கள்,திருவிழாக்கள்,சுற்றுலா தளங்கள் போன்றவைகளில் கூட்ட நெரிசலில் பெண்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் தங்கை அக்கா உடன் பிறந்த அண்ணாவிற்கு தெரியும்.
வருடம் வருடம் பாபநாசம் சொரிமுத்து அய்யனார் கோவில் செல்வது வழக்கம்.
அழகு கொஞ்சும் இயற்கையில் ஐந்து நாட்கள் அங்கு தங்கி வீடு,வேலை மறந்து இயற்கையுடன் இயற்கையாக கடவுளை தரிசிக்க வரும் பக்தர்களில் அவர்கள் குடும்பம் ஒன்று.
குடில்கள் கட்டி அங்கு தங்கி சோறு சமைத்து ஆடி அம்மாவாசை அன்று பட்டவரையானுக்கு படையில் இட்ட வணங்குவது வழக்கம்.
தாமிரபரணி ஆறு தவழும் அழகிய கோவில்,வெட்ட வெளி குடில்கள் தான் ஆகையால் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு.
அண்ணன் தன் உணர்வை கட்டுபடுத்துவன் தவிர கோபத்தையும்,கண்டிப்பையும் அல்ல.
லட்ச மக்கள் கூட்ட நெரிசலில் தன் குடும்பம் பெண்களை பாதுகாத்து வருவது தான் பொது கூட்ட நெரிசலில் கஷ்டம்.
வேண்டும் என்று தீண்ட வரும் கயவர்களை தன் கண்களால் கைது செய்து விடுவான் அவன் அறனாக செயல்பட எங்கள் வீட்டு பெண்கள் பாதுகாப்புக்காக சாமி கூம்பிட்டு வருவார்கள்.
வீட்டிற்கு வந்தவுடன் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு திட்டு தான் கூட்டம் இல்லாத போது போக வேண்டியது தானே என்று.
வீட்டில் உள்ள பெண்கள்,ஆண்கள் ரோட்டில் பத்து நிமிடங்களுக்கு மேல் நின்று இருந்தால் அவ்வளவுதான் தன் பார்வையாலே திட்டிவிடுவான்.
கோபகாரான் தான் வீட்டு விழாக்களில் தன் வீட்டு சிறு குழந்தைகளுக்கு தன் கையால் மருதாணி வைத்து விடும் பாசகார கோபகார தோழன்.
ஆனால் தன் அன்னையிடம் மட்டும் ஏன் இந்த கோபம் என்று அறியவில்லை.
தந்தை வெளிநாட்டில் வேலை புரிய
தாயும் தன்னை மட்டும் தன் அக்கா வீட்டிற்கு (இரு சிறு பிள்ளைகள் தன்னுடன் வைத்து விட்டு) சென்னைக்கு
அனுப்பி விட இந்த கோபம் வந்ததா என்று தெரியவில்லை.தீபாவளி அன்று அவன் சென்னையிலிருந்து ஊருக்கு வருவான் தன் குடும்பத்தை பார்க்க அல்ல தன் நட்புகளை பார்க்க.
அவன் தன் குடும்பத்துடன் பழகி பகிர்ந்து கொண்டவை விட, தன் நண்பர்களுடன் பகிர்ந்தவை தான் அதிகம்.
ஆனால் அவன் நட்பு அவனிடம் உண்மையாக இல்லை.
தீபாவளி அன்று தன் ஊருக்கு வந்தவுடன் கையில் எதும் கொண்டு வரவில்லை.
மாலை வீட்டிற்கு வந்து சாப்பிட்டு வெளியே சென்றுவிட்டான்.
இரவு 2மணி
வீட்டிற்கு பக்கம் இருக்கும் நண்பர் டீ கடையில் தீபாவளி பலகாரம் சமைத்து கொண்டு இருக்க அவனும் அங்கு உதவி செய்கிறான்...நாங்கள் காலை தீபாவளி பண்டிகை கொண்டாட காத்து கொண்டு இருக்கிறோம்.
டக் டக் என்று யாரோ கதவு தட்டும் சத்தம் அதிகாலை 4மணிக்கு....
என்ன நேர்ந்தது என்று அடுத்த கதையில்...
தீபாவளி நல்வாழ்த்துக்கள்
தாய் தந்தை உறவுகளை விட இந்த உலகில் எவரும் உண்மையில்லை
தயவு செய்து நேசியுங்கள்
நம் முன் நம்மை விட்டு செல்லும் முதல் நபர்கள் அவர்கள் தான் பிரிவதற்கு முன் முழு அன்பையும் கொட்டி விடுங்கள்.தனித்துவன்💞
முத்து
YOU ARE READING
என் அன்பு தோழா
General Fictionவணக்கம் தோழர்களே, உலகிலே அதிசயாமான நிகழ்வு 46 குரோமோசோம்களும் தன் இடம் சேர்ந்து செல்லாகி திசுவாகி சதையாகி பிறக்கும் ஒரு உயிர் தான். எவ்வளவு தான் நட்பு,காதல் சிறந்தது என்று சொன்னாலும்;நமக்கு ஒரு பிரச்சினை என்று வந்தால் துடி துடித்து போவது இவர்கள் தான...