உலகிலே அதிசயாமான நிகழ்வு 46 குரோமோசோம்களும் தன் இடம் சேர்ந்து செல்லாகி திசுவாகி சதையாகி பிறக்கும் ஒரு உயிர் தான்.
எவ்வளவு தான் நட்பு,காதல் சிறந்தது என்று சொன்னாலும்;நமக்கு ஒரு பிரச்சினை என்று வந்தால் துடி துடித்து போவது இவர்கள் தான்,
23 குரோமோசோம்களை தந்து
இரு ஐந்து திங்கள் சுமந்து
இருப்பது எலும்புகள் ஒரே சமயத்தில் நொருங்க கூடிய
57 டெல் வலியையும் பெற்று வாழ்த்து முழுவதும் தன்னை மகள்/ன்னு பெற்று போகும் வலியையும் பெறும் தைரியமும் கொண்டு ஒரு உயிரை பூமிக்கு தருகிறாள்;
"அம்மா"மறு 23 குரோமோசோம்களை கொடுத்து
இரு ஐந்து திங்கள்
இரு உயிர் தாங்கி
தன் மனைவி உடல் அளவில் பெறும் வலியை விட உள்ளத்தில் வலி பெற்ற ஒருவர் மகன்/ள் தன் கையில் தொட்டு எனகென ஒருவன் என்று பறைச்சாற்றுபவர்.
"அப்பா"தான் கண்ட கருவறை இருளையும்
தான் கொடுத்த வலியை தாய்க்கும் தந்தைக்கும் கொடுத்து...
தான் உண்ட முலை பாலையும்
தன் பாசத்துயும் பங்கிட்டுக் போட்டியிட வந்த ஒரு உறவுகள்."தொப்புள் கொடி உறவுகள்"
அண்ணன் அக்கா தங்கை தம்பி.
இக்கதை
சில நேரங்களில்
தந்தையாகவும்சில நேரங்களில்
ஆசிரியராகவும்பல நேரங்களில்
தோழனாகவும்இருந்த
ஒரு சகோதரனின் கதை.19ம் நூற்றாண்டில் தென்றல் தழுவி
இயற்கை அரண் அமைத்து மேற்கு தொடராக படுத்திருக்கும் பொதிகை மலை அடிவாரத்தில் நெல்லை மாவட்டத்தில் பிறந்தவன் அவன்.தனக்கு முன் ஒரு அக்கா என்னும் அழகிய தேவதை வரமாக பெற்றவன்.
இரு தாய் கொண்டு பிறந்தவன்.
தன் தாயும் தன் சகோதரியையும் சேர்த்து.அவனுக்கு பிறகு இரு வருட இடைவெளியில் ஒரு அழகிய குட்டி தேவதை தங்கையாகவும்,
ஒரு இளங்கன்று தம்பியாகவும் பெற்று எடுக்கிறாள் அந்த அன்னை.அந்த அன்னை பற்றி சற்று குறிப்பிட வேண்டும்
(தாய் அல்லவ அதனால் தான்)தான் வாழ போகும் குடும்பம் மிக பெரியது என்று தெரிந்தும் தையரிமாக புகுந்த வீடு வந்தவள்,ஐந்த சகோதரங்களையும் ஐந்து சகோதரிகளையும் கொண்ட கணவன் வீட்டில் மூத்த மருமகளாக காலடி வைக்கிறாள்.
கணவனின் சகோதர்கள் அனைவரும் தாய் இழந்த கொஞ்ச வருடம் கழித்து புகுந்த வீட்டில் தாயாக வருகிறாள்.
மாமியார் மருமகள் சண்டை வரும் ஆனால் இங்கோ மாமானர் மருமகள் சண்டை தான்.
தந்த கொழுந்தன்மார்கள் ஒவ்வொராக திருமணம் நடைபெறுகிறது.எல்லோரும் ஓரே வீட்டில் கூட்டு குடும்பமாக இருக்கிறார்கள். குடும்ப சுமை காரணமாக ஐவரில் மூத்தவர் வெளிநாடு செல்கிறார்.
அப்போதெல்லாம் அரிசி சாப்பாடு சாப்பிட்டால் அது பண்ணையார் வீடாம்,மாதம் ஒரு முறை தான் அரிசி சாப்பாடு அதையும் சரியாக பங்கீட்டு செய்து கொடுக்க வேண்டும்.
அதையும் செய்து தன் மகன்களையும் மகள்களையும் பாதுகாத்தவள் கணவன் கூட இல்லாமல் ஒரு பெரிய குடும்பத்தை அந்நாட்களில் கையாளுவது எவ்வளுவு கடினம் என்று அவர் கூறும் போது தெரியும்.
எவருக்கும் முகம் சுழித்து விடாமல் தாயாகவும் வீட்டின் மருமகளாகவும் இருக்க வேண்டும்.ஒரு சமயம் வீட்டில் கடு வறுமை கணவரிடமும் பணம் வரவில்லை சேமித்த காசையும் திருடி விட்டார்கள் சில நம்பிக்கை தூரோகிகள்
தன் குடுபத்தில் மற்றவர்கள் சாப்பிட தன் பிள்ளைகள் சாப்பிடாமல் அருகில் இருக்க அருகில் இருந்த வீட்டுகார்கள் உதவி செய்கிறார்கள்.ஆனால் மூத்த மகளோ அதை ஏற்க மறுக்கிறாள் முன் ஒரு நாள் ஏற்பட்ட அவமானத்தின் காரணமாக.
பசியை விட பெரியது தன்மானம்.
இப்படி ஒவ்வொரு சமயத்திலும் பல கஷடங்களை கடந்து வந்தவள் அம்மா.
தந்தையோ எந்த ஒரு அன்பும் இன்றி வீட்டு சுமை காரணமாக நாடு விட்டு நாடு...
மனைவியின் துக்கம் கஷ்டங்களில் உடன் இருந்து பங்கு கொள்ளாமல்,தனக்கு பிறக்கும் பிள்ளைகளை கூட கையால் தொட்டு தூக்க முடியாத வாழ்க்கை அது.
இவர்களுக்கு பிறந்தவன் அவன்,வயிற்றில் இருக்கும் போதே பல கஷ்டங்களை கண்டவன்.
அதை விட பல இருள்கள் அவனை சூழ போகிறது என்று அறிந்து இருப்பான் போல..என் அன்பு தோழா
பாசங்கள் தொடரும் அடுத்த பதிவில்
நன்றி
தனித்துவன்✒முத்து
ESTÁS LEYENDO
என் அன்பு தோழா
Ficción Generalவணக்கம் தோழர்களே, உலகிலே அதிசயாமான நிகழ்வு 46 குரோமோசோம்களும் தன் இடம் சேர்ந்து செல்லாகி திசுவாகி சதையாகி பிறக்கும் ஒரு உயிர் தான். எவ்வளவு தான் நட்பு,காதல் சிறந்தது என்று சொன்னாலும்;நமக்கு ஒரு பிரச்சினை என்று வந்தால் துடி துடித்து போவது இவர்கள் தான...