ஒருவரை உயிர்பிக்கச்செய்பவனும் அவனே...!
ஒருவரின் உயிர் நீங்கச்செய்பவனும் அவனே...!ஒரு குழந்தையின் பிறப்பு...
அதே வீட்டில் இடம்பெறும் இறப்பு...
அதனால்
முழு ஊரின் எதிர்ப்பையும் பெரும் எதுவுமறியா குழந்தை.வீட்டிலே உறவினர்கள் பலபத்து பேர் இருந்தாலும் தனிமையை தவிர அவளுக்கு உறவு என்று எதுவும் கடவுள் எழுதி வைத்தில்லை போலும்.
சிறுவயதில் இருந்தே சொல்லொணாக்கொடுமைகளை அனுபவித்து வளர்ந்தவளுக்கு இடையில் கிடைக்கும் ஒரு நிம்மதியான வாழ்வு.
என்றாலும் சிறுவயதில் மனதில் ஏற்படும் வடுக்கள் ஆழ்மனதில் போய் பதிந்து விடுவதனால் அவற்றை நம் நினைவகத்தில் இருந்து அழிப்பது சிரமத்திலும் பெரும் சிரமம் ஆகும்.
இவ்வாறு ஆழ்மனதில் பதிந்த வடுவின் காரணமாக ஆண் வர்க்கத்துடன் பழகுவது ஒரு புறம் இருக்க பார்க்கவே பயப்படும் நம் நாயகி...
அவளின் இறந்தகாலத்தையும் நடத்தையையும் முழுமையாக நன்றாகவே அறிந்துகொண்டு முழு அன்பையும் மற்றும் சுவர்க்கலோக இன்பத்தையுமே கொடுக்க தயாராக இருக்கும் நாயகன்...
இந்த நாயகன் அவனது நாயகி இவர்கள் தொடர்பாகவே இந்த கதை அமையப்போகின்றது.
விரைவில் உங்களை சந்திக்க வருவேன்...!
YOU ARE READING
வைகாசி நிலவே! (முடிவுற்றது)
Non-Fictionஒருவரின் பிறப்பு இன்னொருவரின் இறப்புக்கு எந்த விதத்திலும் காரணமாக அமையாது. அவரவர் விதிப்படியே அவரவர் வாழ்க்கை ஆரம்பித்து செல்லுகின்றது. அதே விதிப்படி முடியவேண்டிய சந்தர்ப்பத்தில் முடிந்தும் விடுகின்றது. மீதியை அடுத்தடுத்து வரும் பதிவுகளை வாசிப்பதன்...