இயற்கையை ரசிப்பதே பலபோது மனதுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிப்பதாக அமையும். கடவுள் இயற்கை வளத்தை அவ்வாறு தான் அமைத்துள்ளான்.
ஆனால் இன்று மனிதனின் பல்வேறுபட்ட மனிதாபிமானம் அற்ற சுயநலமான நடத்தைகள் காரணமாக இந்த இயற்கை என்ற கடவுளின் வரமே மனிதனுக்கு தீங்கிழைக்கக்கூடியதாக இன்று அமைந்து காணப்படுகின்றது.
ஞாயிறு அன்று மதியம் கடந்து மாலை நெருங்கும் வேளை அது. அந்த கடற்கரை மணலில் அமர்ந்த படி தோழிகள் ஐவரும் கடலலைகளை ரசித்துக்கொண்டிருந்தனர்.
ஐவரின் பார்வையும் ஒரே இடமான வானை கடல் முத்தமிடும் இடத்தில் பதிந்திருக்க எண்ணங்களோ ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக இருந்தது.
அஞ்சலியின் எண்ணமெல்லாம் இப்போதைக்கு தன் அண்ணாவின் மேல் இருந்தது. அவளது ஆசை எல்லாம் தன் அண்ணனுக்கும் நேஹாவுக்கும் திருமணம் நடைபெற வேண்டும் என்பது தான்.
பல வருடங்களுக்கு முன் பெரியவர்களால் முடிவு செய்யப்பட்டது தான். ஆனால் நேஹா தான், தான் படிக்க வேண்டும் என்ற காரணத்தை காட்டி கல்யாணத்தை அன்று நிறுத்தினாள்.
ஆனால் அதற்காக அவள் வருத்தப்படாத நாளே இல்லை எனலாம். அன்றைக்கு பிறகு அவள் அஞ்சலியின் அண்ணாவைக் காணவே இல்லை என்பதை விடவும் அவன் நேஹாவின் பார்வை வட்டத்துக்குள் தான் விழாமல் பார்த்துக்கொண்டான் என்றே கூறலாம்.
இன்று நேஹாவும் அவனை இங்கு எதிர்பார்க்கவில்லை. அவனும் இவளை இங்கு எதிர்பார்க்கவில்லை. அஞ்சலி நேஹா தன்னோடு தான் வேலை பார்க்கிறாள் என்பதை அவளது வீட்டவர்கள் யாரிடமும் இதுவரை கூறியிருக்கவுமில்லை.
அஞ்சலியும் நேஹாவும் சமவயதை உடையவர்கள். இருவரும் உற்ற தோழிகளும் கூட. அஞ்சலிக்கு நேஹாவுடன் அவள் தன் அண்ணனை அன்று திருமணம் செய்துகொள்ள முடியாது என்று சொன்ன கோபம் தான்.
மற்றைய விதத்தில் அவர்களுக்கு இடையில் எந்த பூசல்களும் கிடையாது. இப்பொழுது நேஹா பக்கத்தில எல்லாம் சரியாகி இருந்தாலும் அன்று நின்ற கல்யாணத்தை எப்படி மீண்டும் நடத்த தான் கோருவது என்பதே அவள் பக்க சிக்கலாக உள்ளது.
YOU ARE READING
வைகாசி நிலவே! (முடிவுற்றது)
Non-Fictionஒருவரின் பிறப்பு இன்னொருவரின் இறப்புக்கு எந்த விதத்திலும் காரணமாக அமையாது. அவரவர் விதிப்படியே அவரவர் வாழ்க்கை ஆரம்பித்து செல்லுகின்றது. அதே விதிப்படி முடியவேண்டிய சந்தர்ப்பத்தில் முடிந்தும் விடுகின்றது. மீதியை அடுத்தடுத்து வரும் பதிவுகளை வாசிப்பதன்...