🌚13🌚

5.2K 172 255
                                    

பரபரப்பான சென்னை மாநகர விமான நிலையம் அந்த அதிகாலை வேளையிலும் தனக்கே உரிய விறுவிறுப்புடன் செயற்பட்டுக்கொண்டிருந்தது.

தோழிகள் ஐவரும் பெங்களூர் நோக்கிய தங்கள் பயணத்தை தொடருவதற்கே இந்த அதிகாலையில் விமான நிலையத்தில் தங்கள் தூக்கத்தை எல்லாம் தொலைத்து விட்டு அமர்ந்திருக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் புகையிரதத்தில் பயணத்தை மேற்கொள்ள திட்டம் போட்டிருக்க இவர்களின் திட்டத்தை குழைக்கவே நிருவின் அண்ணா அனைவருக்கும் விமான டிக்கட்டை ஏற்பாடு செய்வதாக கூறினார். இதைக் கேட்டு நிருவைத் தவிர ஏனைய நால்வருமே முகத்தை சுழிக்க தன் அண்ணனின் பேச்சை மீற முடியாமல் எவ்வாறோ இவர்களை சரிக்கட்டி விமான நிலையம் வரை அழைத்து வந்திருக்கிறாள் நிருஷனா.

வெங்கட் சாரிடம் மேலதிக நேரம் என்று கேட்டு வாங்கி வேளை செய்து ஏனைய நால்வருக்கும் தனக்குமாக ஒரு கிழமை விடுமுறையை வாங்கியிருக்கிறாள் நிரு. இதற்கும் அஞ்சலியிடம் இருந்து நிருவுக்கும் வெங்கட்டுக்குமாக பலமான அர்ச்சனை கிடைத்தது என்னமோ உண்மை தான்.

திடீரென "ஷிட்..." என்று முகத்தை சுளித்த அஞ்சலி தன் கையடக்கத் தொலைபேசியை கொஞ்சம் வேகமாக தட்டி விட்டு "ஐயோ" என்று அழுத்துக்கொண்டாள்.

"இப்போ என்னடி உனக்கு பிரச்சின?
கொஞ்ச நேரம் போஃன நோண்டாம உன்னால இருக்கவே முடியாதா?" - வித்யா

"ஏற்கனவே கடுப்புல இருக்கேன்.
நீ வேற சும்மா கேள்வி கேட்காத வித்."
என்றவள்,
முகத்தை கோணலாக வைத்துக்கொண்டு,
"என் மொபைல் டேடா முடிஞ்சிருச்சு"
என்றாள்.

"ஹஹ்ஹா அதுக்கு தான் மேடம் இவ்ளோ அழுத்துக்குரியா. விட்டா உன்னாலேயே நூற்று ஐம்பது கோடி ஜீபியும் கவர் ஆகிடும் போல" -வித்யா

"நீ என்ன சொல்றன்னு எனக்கு புரியவே இல்ல."
உதட்டை சுழித்தாள் அஞ்சலி.

"இல்ல உலகத்துல அதிக மொபைல் டேடா யூஸ் பண்ற  நாடுகள்ல இந்தியா தான் முதல்ல இருக்கு தெரியுமா.
இந்தியாவுல ஒரு மாதத்துக்கு நூற்று ஐம்பது கோடி ஜீப்பி டேடா யூஸ் பண்றாங்களாம்.
எனக்கென்னமோ விட்டா நீ ஒருத்தியே அந்த மொத்ததையும் யூஸ் பண்ணுவ போல் இருக்கு.
ஹ்ம்ம்ம். உன்னை கட்டிக்கிட்டு வைபை பில்லு கட்டியே எவன் லோஸ்ட் ஆக போறான்னு தெரியல.
பாவம் அந்த அப்பாவி ஜீவன்." -வித்யா

வைகாசி நிலவே! (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora