சென்னையில் அமைந்துள்ள அந்த தெரு, "பீகொக் அவென்யூ" என்ற பெயரை வெளிக்காட்டக்கூடிய அழகான பெரிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பாரிய ஒரு இரும்பு கதவுடன் கம்பீரத்துடன் கூடிய பசுமையுடன் காட்சியளித்து.
அந்த பகுதியின் ஆரம்பத்திலேயே இருக்கும் இரும்புக்கதவுக்கருகில் பரிசோதனை கூடம் இருக்க, அதைத் தாண்டியே உள்ளே செல்ல வேண்டிய அவசியம் காணப்பட அங்கு பாதுகாப்புக்கு கடமைக்கும் ஆட்கள் உள்ளனர் என்பதை அந்த நடைமுறை பறைசாற்றிக்கொண்டிருந்தது.
அந்த பகுதியில் சுமார் அறுபது வீடுகள். அனைத்து வீடுகளும் ஒரேவடிவமைப்புடன் ஒரே மாதிரியாக இருக்க நிறங்கள் மாத்திரம் வெவ்வேறாக இருந்தாலும் பெரும்பாலான வீடுகள் வெள்ளை நிறப்பூச்சையே தம் மீது போர்த்திக்கொண்டிருந்தன.
அந்த இரும்பு வாயிற்கதவை தாண்டி செல்ல நடுவில் தார்பாதையும் இருமருங்கிலும் தனித்தனி வீடுகளும் இருக்கின்றன. முதல் ஐந்து வீடுகளைத் தாண்டும் போது சிறிய அளவிலான ஒரு பல்பொருள் அங்காடியும் அதனை ஒட்டியதாக மருந்தகத்துடன் கூடிய சேனல் மையம் ஒன்றும் அமைந்து காணப்படுகின்றது.
வீடுகள் அனைத்தும் முடியும் இடத்தில் சிறிய அளவிலான வாகன பழுதுபார்த்தல் மற்றும் வாகன சேவை வழங்கும் நிலையம் ஒன்றும் இருக்கின்றது. அங்கு காணப்படும் அறுபது வீடுகளைச் சுற்றியும் தனித்தனியாக மதில்கள் அமைக்கப்பட்டிருக்க ஒவ்வொரு வீட்டின் முன்னாலும் பின்னாலும் அழகான முறையில் பூக்கன்றுகள் வளர்க்கப்பட்டு பாராமரிக்கப்படுகின்றன என்பதற்கு சாட்சியாக அனைத்து வீடுகளும் பசுமையாக காட்சியளித்தன. கூடவே அனைத்து வீடுகளிலும் பக்கவாட்டில் நடுத்தர அளவிலான நீச்சல் தடாகமும் இருக்கின்றது.
சுருக்கமாக கூறினால்,
நகரப்பகுதியிலும் ஒரு குட்டி நவீன நகரமாக அந்த பகுதி காட்சியளித்து. அந்த குட்டி நகரத்தில் உள்ளே ஆட்களை அனுமதி விடுவதில் இருந்து ஒவ்வொரு வீட்டில் இருந்தும் வெளியேற்றப்படும் கழிவுகளை முகாமை செய்வது வரை அனைத்து விடயங்களும் ஒரு செயன்முறையின் கீழே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
YOU ARE READING
வைகாசி நிலவே! (முடிவுற்றது)
Non-Fictionஒருவரின் பிறப்பு இன்னொருவரின் இறப்புக்கு எந்த விதத்திலும் காரணமாக அமையாது. அவரவர் விதிப்படியே அவரவர் வாழ்க்கை ஆரம்பித்து செல்லுகின்றது. அதே விதிப்படி முடியவேண்டிய சந்தர்ப்பத்தில் முடிந்தும் விடுகின்றது. மீதியை அடுத்தடுத்து வரும் பதிவுகளை வாசிப்பதன்...