சில தவறுகள் காலத்தால் மறக்கடிக்கப்பட்டு விடும். ஆனால் தவறு செய்தவர்களால் தாங்கள் செய்த தவறை தங்கள் மரணம் வரை மறக்க முடியாது ஆகும்.
அஜய் - ராணி தம்பதியினரும் அவர்கள் குடும்பத்தாரும் ரிதூவுக்கு செய்த துரோகத்தை அந்த கிராமமே மறந்திருக்கலாம் ஆனால் அவர்களால் அதனை மறக்க முடியவேயில்லை. மறக்கவும் மாட்டார்கள். அவர்களை பொறுத்த வரையில் ரிதுர்ஷிகா யாராலோ திருவிழாவில் கடத்தப்பட்டு விட்டாள். அதுவும் தாங்கள் செய்த தவறினால் என்று இன்று உணர்ந்திருக்கின்றனர். காலம் கடந்து கிடைத்திருக்கும் ஞானம்.
ஆனால் இதற்கான பரிகாரம் என்னவென்று தெரியாமல் ஒவ்வொரு ஆலயம் ஆலயமாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தனரே தவிர வேறு என்ன செய்வதென்று அவர்களுக்கு புரியவே இல்லை. இவ்வாறு இருந்தவர்களை தான் நவநீதன் சந்தித்தான். அவர்கள் மடமையினாலும் அறியாமையினாலும் பறிகொடுத்த அவர்களது மகள் தொடர்பான ஆதி முதல் அந்தம் வரையான அனைத்து தகவல்களையும் கூறினான்.
அந்நேரத்தில் நவா அவர்களுக்கு, தங்கள் மகளை அறிய கடவுளால் அனுப்பப்பட்ட தூதனாகவே தெரிந்தான். அதன் பின் ஒரே ஒரு தடவை விஜய் தன் குடும்பத்தாரை சந்தித்தான். பல வருடங்களுக்குப் பின். அதுவும் அவர்களின் மனமாற்றத்தால். இல்லாவிட்டால் நிச்சியமாக நவாவோ விஜய்யோ அவர்களை சந்தித்திருக்கமாட்டனர். அவர்களின் மாற்றம் தெரியவராமலிருந்தால் நவா தன் மனைவிக்காக அவர்களை சந்திக்க முயற்சி எடுத்திருந்தாலும் விஜய் அதை தடுத்திருப்பான்.
கடவுளின் ஏற்பாடு, இன்று அந்த மொத்த குடும்பமும் அவர்களது தவறை உணர்ந்திருக்கின்றனர். அதனால் தான் இன்று விஜய், அவனது குடும்பம் மற்றும் ரிதூ அவர்களுடன் இணைந்திருக்கின்றனர்.
ரிதூவின் குடும்பத்தவர்கள் அனைவருக்குமாக திருமணத்திற்கும் அதற்கு முந்தைய நாள் நிச்சியதார்த்தத்திற்குமாக நவா பத்திரிகை வைத்து முறைப்படி அழைப்பு விடுத்திருந்தான். அவர்கள் அனைவருமாக பெங்களூர் வந்து தங்குவதற்குமான ஏற்பாடுகளையும் நவா செய்திருந்தாலும் அவற்றை அவர்கள் மென்மையாக தடுத்து அவர்களாகவே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர்.
YOU ARE READING
வைகாசி நிலவே! (முடிவுற்றது)
Non-Fictionஒருவரின் பிறப்பு இன்னொருவரின் இறப்புக்கு எந்த விதத்திலும் காரணமாக அமையாது. அவரவர் விதிப்படியே அவரவர் வாழ்க்கை ஆரம்பித்து செல்லுகின்றது. அதே விதிப்படி முடியவேண்டிய சந்தர்ப்பத்தில் முடிந்தும் விடுகின்றது. மீதியை அடுத்தடுத்து வரும் பதிவுகளை வாசிப்பதன்...